Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

13 வயது சிறுமி பலாத்காரம் - காமக்கொடூரர்களை உயிருடன் எரிக்க முடிவு

Advertiesment
13 வயது சிறுமி பலாத்காரம் - காமக்கொடூரர்களை உயிருடன் எரிக்க முடிவு
, வெள்ளி, 26 அக்டோபர் 2018 (18:15 IST)
ஜார்கண்டில்  13 வயது பெண் குழந்தையை,  குழந்தையின் சொந்த மாமாவே கற்பழித்த கொடூர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
 
நாளுக்கு நாள் பெண்கள், சிறுமிகளுக்கு நிகழும் பாலியல் வன்கொடுமைகள் நாட்டில் தலைவிரித்தாடுகிறது. அந்த வையில் ஜார்கண்ட்டின் சாய்பாஸா என்ற பகுதிக்கு உட்பட்ட மஞ்சரி எனும் கிராமத்தில் நிகழ்ந்திருக்கும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம்  அங்குள்ள பலரையும் விவாதத்துக்கு உட்படுத்தியிருக்கிறது. 
 
13 வயது சிறுமியை சொந்த மாமாவே கற்பழித்துள்ளார்.இதனால் கற்பமடைந்த வளரிளம் பெண் ஊரின் முன் வெளிச்சத்துக்கு வர, ஊரின் பாரம்பரிய பஞ்சாயத்து, ஊரின் மரபு மற்றும் பண்பாட்டு கட்டுப்பாடுகள் அழிந்துவிட்டதாக எண்ணி ஊர் பொதுமக்கள் முன்னிலையில் பஞ்சாயத்து நடத்தியுள்ளனர். அப்போது அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
 
அதாவது ஊரின் மரியாதையை கெடுத்ததாகவும்,  ஊரின் கவுரவத்துக்கு களங்கம் விளைவித்ததாகச் சொல்லியும் பாதிக்கப்பட்ட 13 வயது பெண் குழந்தையையும் , பலாத்காரம் செய்தவனையும் உயிருடன் எரித்துக் கொல்ல திட்டமிட்டுள்ளனர்.
 
அப்படி இல்லை என்றால் 5 லட்சம் அபராதமும் கட்டச் சொல்லி தீர்ப்பளித்துள்ளது. இதனை கேள்விப்பட்ட போலீசார், 6-ம் வகுப்பு படித்துவந்த 13 வயது குழந்தையை பலாத்காரம் செய்த குழந்தையின் 28 வயது மாமாவை கைது செய்துள்ளனர்.
 
இதுபோன்று தீர்ப்பளித்த பஞ்சாயத்து முக்கியஸ்தர்களையும் விசாரித்து வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூவத்தூர் ரகசியத்தை வெளியிடுவேன் : எம்.எல்.ஏ.கருணாஸ்