ஐதராபாத்தில் இதய தானம் கிடைத்த நிலையில் அந்த இதயத்தை இன்னொருவருக்கு பொருத்துவதற்காக 13 கிலோமீட்டர் தொலைவை 13 நிமிடங்களில் மெட்ரோ ரயில் உதவி மூலம் உரிய இடத்தில் சேர்த்து அந்த இதயத்தை பொருத்தப்பட்டுள்ளது
ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தானமாக பெறப்பட்ட இதயத்தை அங்கிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இன்னொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நிலையில் ஹைதராபாத் மெட்ரோ நிர்வாகத்தின் உதவியை டாக்டர்கள் நாடினர்.
இதனை அடுத்து 13 கிலோமீட்டர் தொலைவை 13 நிமிடங்களில் சென்றடைவதற்கு ஐதராபாத் மெட்ரோ ரயில் அதிகாரிகள், மருத்துவமனை நிபுணர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் திட்டமிட்டனர்.
மெட்ரோ அதிகாரிகளின் ஒத்துழைப்பு காரணமாக இதயம் சரியான நேரத்துக்கு சரியான இடத்துக்கு சென்றதாகவும் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.