Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுத்த 24 மணி நேரத்தில் 2,200 இந்தியர்களை அழைத்து 11 விமானங்கள்!!

Advertiesment
அடுத்த 24 மணி நேரத்தில் 2,200 இந்தியர்களை அழைத்து 11 விமானங்கள்!!
, வெள்ளி, 4 மார்ச் 2022 (18:35 IST)
அடுத்த 24 மணி நேரத்தில் 2,200 இந்தியர்களை அழைத்து 11 விமானங்கள் வரும் என இந்திய விமான போக்குவரத்துத்துறை தகவல். 

 
இந்திய குடிமக்களை மீட்பதற்கான ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ், 14 சிவிலியன் விமானங்கள் மற்றும் 3 C-17 IAF விமானங்கள் உட்பட யுக்ரேனின் அண்டை நாடுகளில் இருந்து 17 சிறப்பு விமானங்கள் இன்று நாடு திரும்பியுள்ளன. மேலும் ஒரு சிவிலியன் விமானம் இன்றைய தினம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
சிவிலியன் விமானங்கள் 3,142 பேரை அழைத்து வந்துள்ளன. C-17 விமானங்கள் 630 பயணிகளை அழைத்து வந்துள்ளன. இதுவரை, 43 சிறப்பு சிவிலியன் விமானங்கள் மூலம் 9,364 இந்தியர்கள் யுக்ரேனில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர். C-17 ரக 7 விமான சேவைகள் மூலம் இதுவரை 1,428 பயணிகளை யுக்ரேனின் எல்லையில் உள்ள நாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர்.
 
இது தவிர, இந்தியாவில் இருந்து 9.7 டன் நிவாரணப் பொருட்களை சி17 ரக போர் விமானம் யுக்ரேனின் அண்டை நாடுகளுக்கு கொண்டு சென்றுள்ளன. இன்றைய சிவிலியன் விமானங்களில் புக்கரெஸ்டில் இருந்து 4, கோசிஸிலிருந்து 2, புடாபெஸ்டிலிருந்து 4, ஸெஸ்ரோவில் இருந்து 3 மற்றும் சுசேவாவிலிருந்து 2 அடங்கும்,
 
அதே நேரத்தில் இந்திய விமானப்படையின் இரு விமானங்கள் புக்காரெஸ்டிலிருந்து 2 விமானங்களையும் புடாபெஸ்டிலிருந்து 1 விமானத்தையும் இயக்கியது. நாளை 11 சிறப்பு சிவிலியன் விமானங்கள் 2,200க்கும் மேற்பட்ட இந்தியர்களை தாயகத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 10 சேவைகள் டெல்லியிலும், ஒன்று மும்பையிலும் தரையிறங்கும்.
 
5 விமானங்கள் புடாபெஸ்டில் இருந்தும், 2 ஸெஸ்ரோவில் இருந்தும் 4 சுசேவாவிலிருந்தும் புறப்படும். நான்கு C-17 விமானங்கள் ருமேனியா, போலாந்து மற்றும் ஸ்லோவாக்கியாவிற்கு புறப்பட்டுள்ளன. அவை இன்று நள்ளிரவு அந்த நாடுகளை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வென்றவர்களை பதவி விலகும்படி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு