Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

11 மாநிலங்களில் 106 பேர் கைது… என்.ஐ.ஏ ரெய்டு எதிரொலி!

11 மாநிலங்களில் 106 பேர் கைது… என்.ஐ.ஏ ரெய்டு எதிரொலி!
, வியாழன், 22 செப்டம்பர் 2022 (13:35 IST)
இன்று 11 மாநிலங்களில்  என்ஐஏ, அமலாக்கத்துறை மற்றும் மாநில போலீசார் நடத்திய சோதனையில் 106 பேர் கைது.


பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா (Popular Front Of India) அமைப்பின் அலுவலகங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை நடத்தியது. சமீபத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்தல், தடைசெய்யப்பட்ட அமைப்புகளில் சேர மக்களை ஊக்குவித்தல் உள்ளிட்ட தேச விரோத செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதை தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பு இந்தியா முழுவதும் 10 மாநிலங்களில் பி.எப்.ஐ அமைப்பின் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டிலும் சென்னை, கோவை, கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பி.எப்.ஐ அமைப்பின் அலுவலகங்களில் நள்ளிரவு முதலாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 10 மாநிலங்களில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ, அமலாக்கத்துறை மற்றும் காவல்துறை பி.எப்.ஐ அமைப்பு உறுப்பினர்களை கைது செய்துள்ளது. இந்த ரெய்டு மற்றும் கைது சம்பவங்களை எதிர்த்து பி.எப்.ஐ தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆம், இன்று 11 மாநிலங்களில்  என்ஐஏ, அமலாக்கத்துறை மற்றும் மாநில போலீசார் நடத்திய சோதனையில் 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திரப் பிரதேசம் (5), அசாம் (9), டெல்லி (3), கர்நாடகா (20), கேரளா (22) , மத்திய பிரதேஷ்(4), மகாராஷ்டிரா (20), புதுச்சேரி (3), ராஜஸ்தான் (2), தமிழ்நாடு (10) மற்றும்  உத்தரபிரதேசம்(8) ஆகிய மாநிலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜிப்மர் மருத்துவமனையில் மருந்துகள் தட்டுப்பாடு: பாமக ராமதாஸ் கண்டனம்