Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு 100% வரி.. பொருளாதாரத்தை நசுக்குவோம்! - அமெரிக்கா எச்சரிக்கை!

Prasanth K
புதன், 23 ஜூலை 2025 (09:26 IST)

இந்தியாவிற்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும், பொருளாதாரத்தை நசுக்கி விடுவோம் என்றும் அமெரிக்க எம்.பி எச்சரிக்கை விடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவுடன் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து வணிகம் செய்து வருவதாலேயே ரஷ்யாவால் தொடர்ந்து போரை நடத்த முடிகிறது என்றும், அதனால் இந்த நாடுகள் ரஷ்யாவுடனான வணிகத்தை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா கூறி வருகிறது. ஆனால் இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் கணிசமான அளவில் ரஷ்யாவிலிருந்தே இறக்குமதி செய்து வருகிறது.

 

அதற்கு அமெரிக்கா தொடர்ந்து தனது அதிருப்தியை தெரிவித்து வருகிறது. தற்போது அமெரிக்க எம்.பி லிண்ட்சே கிரகாம் பேசும்போது “ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிபர் ட்ரம்ப் 100 சதவீதம் வரிவிதிக்க உள்ளார். இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு நான் சொல்லவருவது என்னவென்றால் ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போரை நீட்டிப்பதற்கு நீங்கள் ரகசியமாக அனுமதித்தால் உங்கள் பொருளாதாரத்தை நாங்கள் நசுக்குவோம்” என எச்சரித்துள்ளார்.

 

இந்தியாவை அமெரிக்க எம்பி ஒருவர் வெளிப்படையாகவே எச்சரிக்கும் விதமாக பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு 100% வரி.. பொருளாதாரத்தை நசுக்குவோம்! - அமெரிக்கா எச்சரிக்கை!

கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள்.. கறார் வேண்டாம்.. சொத்து வரி குறித்து தமிழக அரசு அறிவுறுத்தல்?

திருமண தகராறுகள் வழக்குகளில் உடனடி கைது நடவடிக்கை எடுக்க கூடாது: சுப்ரீம் கோர்ட்

16 வயது மாணவனுக்கு பலமுறை பாலியல் பலாத்காரம்.. கைதான ஆசிரியைக்கு எளிதாக கிடைத்த ஜாமின்..!

ஆம்புலன்ஸ் இல்லாததால் வீட்டில் இரட்டை குழந்தைகள் பிரசவம்; ஒரு குழந்தை உயிரிழப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments