Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

10 வயது சிறுமியை தொடர்ந்து பலாத்காரம் செய்த உறவினர்: கர்ப்பத்தை கலைக்க மறுக்கும் நீதிமன்றம்!

10 வயது சிறுமியை தொடர்ந்து பலாத்காரம் செய்த உறவினர்: கர்ப்பத்தை கலைக்க மறுக்கும் நீதிமன்றம்!

10 வயது சிறுமியை தொடர்ந்து பலாத்காரம் செய்த உறவினர்: கர்ப்பத்தை கலைக்க மறுக்கும் நீதிமன்றம்!
, சனி, 22 ஜூலை 2017 (15:58 IST)
பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் 10 வயது சிறுமி ஒருவர் உறவினர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமாகி உள்ளார். 30 வார கருவை சுமந்து வரும் அந்த சிறுமிக்கு கருகலைப்பு செய்ய நீதிமன்றம் மறுத்துள்ளது.


 
 
நேபாளத்தை சேர்ந்த தம்பதிகள் இருவர் வீட்டு வேலை செய்து தங்கள் பிழைப்பை சண்டிகரில் நடத்தி வந்தனர். இந்நிலையில் அவர்களது உறவினர் ஒருவர் அவர்களது 10 வயது சிறுமியை வீட்டுக்கு தெரியாமல் தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதன் காரணமாக அந்த சிறுமி கர்ப்பமாகி உள்ளார்.
 
நாட்கள் ஆக ஆக சிறுமியின் வயிறு பெரிதாகி வந்துள்ளது. மேலும் சிறுமி அடிக்கடி வயிறு வலிக்கிறது என கூற பெற்றோர்கள் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதை பெற்றோரிடம் கூற அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
 
சிறுமியின் உறவினர் தான் சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணம் என தெரியவர காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த நபர் கைது செய்யப்பட்டார். பின்னர் சிறுமி 30 வார கருவை சுமந்து வருவதால் உடல் ரீதியாகவும், மன நீதியாகவும் பாதிக்கப்பட்டு வருவதால் கருவை கலைக்க அனுமதி வேண்டி நீதிமன்றத்தை நாடினர் பெற்றோர்கள்.
 
ஆனால் மருத்துவ ஆலோசனைக்கு பின்னர் கருவை கலைத்தால் சிறுமியின் உயிருக்கு ஆபத்து என்பதால், சிறுமிக்கு கருகலைப்பு செய்ய நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் 15 வயதிற்கு உட்பட்ட சிறுமிகள் குழந்தை பெற்றுக் கொள்வதால் ரத்தசோகை, உயர் ரத்த அழுத்தம் ஆகியவை ஏற்பட்டு அது அவர்கள் உயிருக்கே ஆபத்தாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல்ஹாசன் செய்வது நல்ல மனிதனுக்கு அழகில்லை: ஜே.கே.ரித்தீஷ்