பெங்களூரில் வீட்டுக்கு வெளியே விளையாடிய சிறுமியை 10 தெரு நாய்கள் கடித்ததால் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூர், மாகடி சாலையில் உள்ள அஞ்சனா நகர் பகுதியில் ராமு என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ரம்யா(6 வயது), நேற்று முந்தினம் இரவு தனது வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அத்தெருவில் 10 நாய்கள் ரம்யாவை விரட்டி கடித்துள்ளதுன. இதனால் சிறுமி கத்திய தொடங்கியது. அந்த சிறுமியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து நாய்களை விரட்டி அடித்தனர்.
தெரு நாய்கள் கடித்ததில் பலத்த காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் மருத்துவமனையில் 5 மருத்துவர்கள் சிறுமிக்கு தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர்.