ஆந்திராவில் இன்று ஒரே நாளில் 10ஆயிரத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

Webdunia
புதன், 29 ஜூலை 2020 (19:07 IST)
தமிழகத்தில் நாள்தோறு சுமார் 7000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் இன்று கூட தமிழகத்தில் 6426 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பதையும் பார்த்தோம் .இந்த நிலையில் தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களில் ஒன்றான ஆந்திராவில் இன்று ஒரே நாளில் 10,093 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
தென்னிந்தியாவின் முதல் முறையாகவும் இந்தியாவில் இரண்டாவது மாநிலமாகவும் ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 10,093 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,20,390 ஆக உயர்ந்துள்ளது
 
மேலும் ஆந்திராவில் இன்று ஒரே நாளில் 65 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1213ஆக உயர்ந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு என்ற தகவல் ஆந்திர அரசை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் மாலையில் நேரத் திடீர் ஏற்றம்: சென்னை நிலவரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.. முதலமைச்சருக்கு சம்பள உயர்வா? பாஜக கண்டனம்..!

போலி உலக சாதனை சான்றிதழ் என அம்பலம்.. தர்ம சங்கடத்தில் முதல்வர் சித்தராமையா..!

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments