முன்னேறி செல்வோம்- மோடியின் வெற்றி செய்தி
, வியாழன், 20 டிசம்பர் 2012 (16:30 IST)
குஜராத்தில் வெற்றி பெற்ற நரேந்திர மோடி, ‘இனிமேல் எதையும் திரும்பி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. முன்னேறி செல்வோம். எல்லையில்லா சக்தியும், எல்லையில்லா துணிவும், எல்லையில்லா பொறுமையும் நமக்கு தேவை’ என்று தனது வெற்றி செய்தியை அவர் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அகமதாபாத்தில் உள்ள மணிநகர் தொகுதியில், நரேந்திரமோடி தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஷ்வேதா பட்டை வென்றுள்ளார். குஜராத் சட்டசபை தேர்தலில் மணிநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நரேந்திர மோடி, ஷ்வேதா பட்டை விட 75 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றியை உறுதி செய்தார்.பின்னர் தனது வெற்றி குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்த மோடி,‘இனிமேல் எதையும் திரும்பி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. முன்னேறி செல்வோம். எல்லையில்லா சக்தியும், எல்லையில்லா துணிவும், எல்லையில்லா பொறுமையும் நமக்கு தேவை’ என கூறியுள்ளார்.