Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை.. யார் யார் கலந்து கொண்டார்கள்?

Mahendran
சனி, 1 ஜூன் 2024 (15:47 IST)
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர். இந்த கூட்டத்தில் பல்வேறு மாநில தலைவர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

இந்தியாவில் நடந்த பாராளுமன்றத் தேர்தல் ஏழு கட்டமாக முடிவடைந்துள்ள நிலையில் வரும் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது என்பதும் அன்று இரவே கிட்டத்தட்ட புதிய ஆட்சி அமைப்பது யார் என்பது தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியினர் ஆட்சிக்கு வந்து விடுவார்கள் என்று அந்த கூட்டணியில் உள்ள தலைவர்கள் முழுமையாக நம்பும் நிலையில் இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் இல்லத்தில் இந்தியா கூட்டணியின் தலைவர்கள் கூடி ஆலோசனை செய்து வருகின்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், சரத் பவார், அகிலேஷ் யாதவ்,  டிஆர் பாலு, பங்கேற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள மம்தா பானர்ஜி உட்பட பல தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இன்றைய கூட்டத்தில் என்னென்ன முடிவு எடுக்கப்பட்டது என்பதை இன்னும் சில மணி நேரத்தில் பத்திரிகையாளர்களுக்கு முறைப்படி அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடியை அடுத்து அமெரிக்காவுக்கு செல்லும் நிர்மலா சீதாராமன்.. டிரம்ப் உடன் சந்திப்பு இல்லையா?

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை போக்குவரத்து மாற்றம்.. மாற்று வழிகள் என்ன?

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments