மத்திய பிரதேச மாநிலம், சிந்த்வரா மாவட்டதிலுள்ள கிராமம் ஒன்றில் சுவர் இடிந்து விழுந்ததில், அங்கு வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் 6 பேர் பலியாகியுள்ளனர்.
பலியான தொழிலாளர்கள் 6 பேரும் கல் உடைக்கும் இயந்திரம் ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது, பின்னாலிருந்த சுவர் அவர்கள் மீது இடிந்து விழுந்துள்ளது.
இந்த விபத்தில் சிக்கிய தொழிலாளர்கள் 6 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். பலியானவர்கள் பற்றிய விபரங்களை சேகரிக்கும் பணியில் அப்பகுதி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.