Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2021 க்கு முன் தடுப்பு மருந்து வர வாய்ப்பே இல்லை – மத்திய அரசு அறிவிப்பு!

Advertiesment
Corona vaccine should not be available before 2021
, சனி, 11 ஜூலை 2020 (11:35 IST)
இந்தியாவில் கொரோனா மருந்து 2021 ஆம் ஆண்டுக்கு முன் வருவதற்கு வாய்ப்பே இல்லை என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் உலகையே நிலைகுலைய வைத்துள்ள நிலையில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல நாட்டு ஆராய்ச்சியாளர்களும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால் இப்போது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும், அது மக்கள் செயல்பாட்டுக்கு வர ஒரு ஆண்டுக்கு மேலாகும் என சொல்லப்படுகிறது.

இந்தியா covaxin TM என்ற மருந்தை உருவாக்கியுள்ளது. இதனை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த மருந்தை மனிதர்கள் மீது இந்த மருந்தை அடுத்த மாதம் சோதனை அடிப்படையில் பயன்படுத்த DCGI ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்குள்ளாகவே ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் மருந்து பயன்பாட்டுக்கு வரும் என தகவல்கள் வெளியாகின.

ஆனால் அதனை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘கோவேக்சின், இசட்ஒய்கோவ்-டி ஆகிய இரண்டைச் சேர்ந்த 140-ல் 11 தடுப்பு மருந்துகள் மனித சோதனைக் கட்டத்தை எட்டியுள்ளன. ஆனால் இந்த 11 மருந்துகளில் எதுவும் 2021 ஆம் ஆண்டுக்கு முன் பயன்பாட்டுக்கு வராது’ எனக் கூறியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சஸ்பென்ஸ் விலை; சூப்பர் ஃபீசர்ஸ்: ரெட்மி நோட் 9 விவரம் உள்ளே!