Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கர்ப்பிணிக்கு ஜிகா வைரஸ் - கேரளாவில் அதிர்ச்சி!

Advertiesment
Kerala Reports First Zika Virus Infection This Year
, வெள்ளி, 9 ஜூலை 2021 (10:30 IST)
மெல்ல மெல்ல கொரோனா குறைந்து வரும் நிலையில் கேரளாவில் ஜிகா வைரஸ் தலைகாட்டி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
மெல்ல மெல்ல கொரோனா குறைந்து வரும் நிலையில் கேரளாவில் ஜிகா வைரஸ் தலைகாட்டி இருப்பது மாநில அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆம், கேரளாவை சேர்ந்த 24 வயது கர்ப்பிணி ஒருவர் காய்ச்சல், தலைவலி மற்றும் உடல் முழுவதும் சிவப்பு புள்ளிகள் ஏற்பட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 
 
தொடர்ந்து அவதிப்பட்டு வந்த அந்த பெண்ணின் ரத்த மாதிரிகள் புனேயில் உள்ள வைரஸ் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதீதமாய் குறைந்த தங்கத்தின் விலை !!