அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியாகாந்தி வயது மற்றும் உடல்நலம் கருதி தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்த நிலையில் அடுத்த காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
இந்த பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தியை தவிர வேறு யாரும் போட்டியிடாததால் அவர் விரைவில் அதிகாரபூர்வமான காங்கிரஸ் கட்சியின் தலைவராக அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறின.கடந்த 11ம் தேதி காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல்காந்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக டிசம்பர் 16-ம் தேதி பதவி ஏற்பார் என கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார். கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். நேரு குடும்பத்தில் இருந்து காங்கிரஸ் தலைவராகும் 6-வது பிரமுகர் ராகுல்காந்தி என்பதும் அவர் காங்கிரஸ் கட்சியின் 87வது தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.