ஹரிதாஸ் படத்தை இயக்கிய குமரவேலன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நாயகனாகவும், ரன்யா நாயகியாகவும் நடித்திருக்கும் படம் வாகா. இந்த படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்ததாலும், ஹரிதாஸ் படத்தை இயக்கியவரின் படம் என்பதாலும் இந்த படம் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. இந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா என பார்ப்போம்.
படம் ஆரம்பிக்கும் போதே விக்ரம் பிரபு பாகிஸ்தான் சிறையில் இருக்கிறார். அதன் பின்னர் பிளாஷ் பேக் விரிகிறது. ஊரில் ஜாலியாக சுற்றிக்கொண்டு இருக்கும் வேண்டும் என நினைக்கும் விக்ரம் பிரபுவை அவரது அப்பா மளிகை கடையில் வேலை பார்க்க வைத்ததால், மிலிட்டரிக்கு சென்றால் சரக்கு கிடைக்கும் என ஆசைப்பட்டு பிஎஸ்ஃப் எனப்படும் எல்லை பாதுகாப்பு படையில் சேர்கிறார்.
மிலிட்டரில் சேர்ந்தால் குடிக்கலாம் என நினைத்து வரும் விக்ரம் பிரபு, மிலிட்டரி வாழ்க்கைக்கு ஊரில் உள்ள வாழ்க்கையே சிறந்தது என நினைக்கும் போது தான் கதாநாயகி ரன்யாவை பார்க்கிறார். அப்புறம் என்ன ஹீரோவுக்கு பார்த்தவுடன் காதல் வருகிறது.
காஷ்மீரில் நடக்கும் கலவரம் ஒன்றால் அங்கு இருக்கும் பாகிஸ்தான் குடியுரிமை பெற்றவர்களை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடுகிறார்கள். அப்பொழுது தான் தெரிகிறது நாயகி பாகிஸ்தானை சேர்ந்தவர் என்று.
பாகிஸ்தானுக்கு செல்வதில் நாயகி ரன்யாவுக்கு சிலரால் பிரச்சனை வர, அவரை பத்திரமாக பாகிஸ்தானுக்கு கொண்டு சேர்ப்பதில் பாகிஸ்தான் வசம் மாட்டிக்கொள்கிறார்.
அங்கு சித்ரவதை சிறையில் விக்ரம் பிரபு அடைக்கப்படுகிறார். அங்கு ஏற்கனவே 20-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் சித்ரவதை அனுபவித்து வருகிறார்கள். இந்நிலையில் அந்த சிதரவதை சிறையில் இருந்து விக்ரம் பிரபு தப்பித்தாரா?, அதில் உள்ள மற்ற வீரர்களையும் மீட்டாரா?, அவருக்கு என்ன ஆனது என்பது தான் மீதி கதை.
இந்த படம் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டதால், படம் முழுக்க நாயகி ரன்யாவும் பயணிக்கிறார். படத்தில் பல காட்சிகள் பல்வேறு படங்களில் இருந்து எடுக்கப்பட்டது போல் உள்ளது. திரைக்கதை தள்ளாடுகிறது. ஹரிதாஸ் படத்தை இயக்கிய குமர்அவேலனின் படமா என்பதில் சதேகம் வருகிறது.
விக்ரம் பிரபு உடலமைப்பில் பாதுகாப்பு படை வீரனைப்போல் இருந்தாலும், நடிப்பில் அவர் இன்னமும் முதிர்ச்சி அடையவில்லை. ஒளிப்பதி மற்றும் செட் அமைப்பு படத்திற்கு சிறப்பாக அமைந்திருக்கிறது. இசையமைப்பு படத்தில் சொல்லுக்கொள்ளும் படியாக இல்லை. இசை கூட பலவெஏறு படங்களில் கேட்ட மாதி உள்ளது. பாடல்கள் படத்தோடு சேர்ந்து பயணிக்கவில்லை.
வலுவில்லாத திரைக்கதை, பல படங்களில் வரும் காட்சிகளை முன்னிறுத்துவது போல் உள்ள காட்சியமைப்பு, முதிர்ச்சியடையாத விக்ரம் பிரபுவின் நடிப்பு என படத்தை பல விஷயங்கள் கவிழ்த்து விட்டது.
மொத்தத்தில் வாகா ‘வரவேற்பில்லை’