Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

"வல்லவன் வகுத்ததடா" திரை விமர்சனம்!

Advertiesment

J.Durai

, சனி, 20 ஏப்ரல் 2024 (17:38 IST)
விநாயக் துரை இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் "வல்லவன் வகுத்ததடா "
 
இத் திரைப்படத்தில் தேஜ் சரண்ராஜ், ராஜேஷ் பாலச்சந்திரன், அனன்யா மணி, சுவாதி மீனாட்சி, ரெஜின் ரோஸ் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.
 
ஆறு கதாபாத்திரங்களை சுற்றி நடக்கிறது இப்படத்தின்  கதை களம்
 
என்ன செய்தாலும் பரவாயில்லை, எப்படிப்பட்ட தவறுகள் செய்தாலும் பராவயில்லை பணம் தான் முக்கியம் என்று பயணிக்கும் ஐந்து பேர் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருக்கிறார்கள்.
 
ஆனால், மற்றவர்களுக்கு உதவி செய்வதோடு, நேர்மையாக வாழ வேண்டும் என்று நினைக்கும் ஒருவர் வாழ்க்கையில் அனைத்தையும் இழந்ததோடு,மேலும் மேலும் துன்பப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறார்.
 
இந்த ஆறு பேரும் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாதவர்கள் என்றாலும் பணம் இவர்களுக்கிடையே தொடர்பை ஏற்படுத்துகிறது.
 
அதனால் இவர்களின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை, விறுவிறுப்பாகவும்  சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விநாயக் துரை.
 
தேஜ் சரண்ராஜ், ராஜேஷ் பாலச்சந்திரன், அனன்யா மணி, சுவாதி மீனாட்சி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் ஆகியோர்கள்  
கதாபாத்திரத்திற்கேற்றார்போல சிறப்பாக நடித்துள்ளனர்.
 
ஒளிப்பதிவாளர் கார்த்திக் நல்லமுத்து   கதைக்கு ஏற்ப தனது கேமராவை பயணிக்க வைத்துள்ளார்.
 
இசையமைப்பாளர் சகிஷ்னா பின்னணி இசையையால் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளார். 
 
மொத்தத்தில்  "வல்லவன் வகுத்ததடா"பார்ப்பவர்களின் மனதை கொள்ளை கொள்ளும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"ரூபன்" திரை விமர்சனம்