Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்குத்து - திரை விமர்சனம்

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2017 (12:23 IST)
வழக்கமான பழிவாங்கல் கதையை, வித்தியாசமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் ராஜு.



கார்த்திக் ராஜு இயக்கத்தில் தினேஷ், நந்திதா ஸ்வேதா ஜோடியாக நடித்துள்ள படம் ‘உள்குத்து’. பால சரவணன் முக்கிய வேடத்தில் நடிக்க, திலீப் சுப்புராயன் மற்றும் சரத் லோகிதாஸ்வா இருவரும் வில்லன்களாக நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். பால சரவணன் வசிக்கும் குப்பத்துக்கு, யாருமில்லையென்று சொல்லி வந்து அடைக்கலம் கேட்கிறார் தினேஷ். அவரை படித்தவர் என்று நம்பும் பால சரவணன், தன் வீட்டில் அடைக்கலம் கொடுக்கிறார். தினேஷுக்கும், நந்திதாவுக்கும் இடையில் காதல் மலர்கிறது.

வில்லனின் ஆள் ஒருவனை தினேஷ் அடிக்கப்போக, தினேஷைப் போட்டுத்தள்ள ஆட்களுடன் வருகிறார் திலீப் சுப்புராயன். அவரையும் தினேஷ் அடித்து துவைக்க, திலீப் சுப்புராயனின் தந்தையான சரத் லோகிதாஸ்வாவுக்கு கோபம் வருகிறது. எப்படியாவது தினேஷைக் கொன்றுவிடுமாறு அடியாட்களிடம் கூறுகிறார்.

இந்நிலையில், திடீரென படகுப்போட்டியில் திலீப் சுப்புராயனுக்கு விட்டுக்கொடுத்து, வில்லன்கள் இருவரிடமும் நட்பாகிறார் தினேஷ். வில்லன்களை அடித்த தினேஷ் அவர்களிடம் ஏன் நட்பாகிறார் என்பது மீதிக்கதை.

வழக்கம்போல தினேஷ் ஒரே மாதிரியான ரியாக்ஷனில் நடித்தாலும், கவர்கிறார். நந்திதா அழகாக வந்துபோகிறார். படம் முழுக்க வந்து காமெடியாக ரசிக்க வைத்திருக்கிறார் பால சரவணன். வில்லன்கள் இருவரின் நடிப்பும் பிரமாதம். அடுத்து இப்படித்தான் நடக்கும் என நாம் நினைத்திருக்க, நமக்கு ட்விஸ்ட் வைத்து வேறுமாதிரியான திரைக்கதையைக் கொண்டு சென்று விறுவிறுப்பாக்கியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் ராஜு.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்… கீர்த்தி பாண்டியனின் க்யூட் க்ளிக்ஸ்!

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சிவகார்த்திகேயனை இயக்கும் படம் எப்போது தொடங்கும்?... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

அடுத்த ‘பாண்ட் கேர்ள்’ சிட்னி ஸ்வீனியா?... ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

நீங்களும் உங்கள் துணிச்சலும் என்றும் நினைவில் இருப்பீர்கள்… ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் ராஜுக்கு மாரி செல்வராஜ் இரங்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments