Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

#MasterReview: தளபதி விஜய்யின் மாஸ் படமா ‘மாஸ்டர்’? திரைவிமர்சனம்

Advertiesment
#MasterReview: தளபதி விஜய்யின் மாஸ் படமா ‘மாஸ்டர்’? திரைவிமர்சனம்
, புதன், 13 ஜனவரி 2021 (09:47 IST)
தளபதி விஜய்யின் மாஸ் படமா ‘மாஸ்டர்’? திரைவிமர்சனம்
தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படம் தளபதி விஜய்க்கு என்று ஒரு மாஸ் படமா? என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்
 
கல்லூரி பேராசிரியரான விஜய் மதுவுக்கு அடிமையாகி போதையுடன் பணி செய்து கொண்டிருப்பதால் அந்த கல்லூரியில் இருந்து நிர்வாகத்தினரின் அழுத்தம் காரணமாக வெளியேறுகிறார். அதன் பிறகு அவர் சிறுவர் சீர்திருத்த பள்ளி ஒன்றில் மாஸ்டராக நியமனம் செய்யப்படுகிறார். அந்தப் பள்ளி வில்லன் விஜய் சேதுபதியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதையும் அங்கு உள்ள சிறுவர்களை சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு விஜய் சேதுபதி பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதையும் விஜய் கண்டுபிடிக்கிறார். இதன் பின்னர் விஜய் மற்றும் விஜய் சேதுபதிக்கு இடையில் நடக்கும் மோதலும் விஜய் சேதுபதியின் கொட்டத்தை விஜய் எப்படி அடக்கினார் என்பது தான் மீதி கதை என்பது குறிப்பிடதக்கது
 
விஜய் வழக்கம் போல் ஒரு மாஸ் ஹீரோவாக ஜேடி என்னும் கல்லூரிப் பேராசிரியராக நடித்துள்ளார். ஆரம்பத்தில் கல்லூரி காட்சிகள் கொஞ்சம் ஸ்லோவாக இருந்தாலும் விஜய் சரியாக ஸ்கோர் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு வந்த பிறகு அவருடைய மாஸ் காட்சிகளும் ஆக்ஷன் காட்சிகளும் ஆரம்பமாகின்றன
 
webdunia
தளபதி விஜய்யின் மாஸ் படமா ‘மாஸ்டர்’? திரைவிமர்சனம்
நாயகி மாளவிகா மோகனன் வழக்கம்போல் பாடலுக்கு மட்டும் ஆடும் ஹீரோயினாக இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் தரும் வகையிலும் வந்திருப்பது திருப்தியான ஒன்றாக உள்ளது. பவானி என்ற வில்லன் கேரக்டரில் விஜய் சேதுபதி மாஸ் காட்டியுள்ளார். கிட்டத்தட்ட விஜய்க்கு இணையான கேரக்டர் என்பதும் அவருடைய வழக்கமான பாணியிலான நக்கலான நடிப்பும் அவரது கேரக்டரை மெருகேற்றுகிறது.
 
அதேபோல் அர்ஜுன் தாஸ் கேரக்டரும் மிக அருமை. மகேந்திரன், ஆண்ட்ரியா, சாந்தனு உள்ளிட்டோர் ஒரு சில காட்சிகளில் மட்டும் வருவதால் மனதில் பதிய மறுக்கின்றனர்.
 
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இரண்டு மாஸ் நடிகர்களுக்கும் இணையான காட்சிகளை வைத்து திறம்பட திரைக்கதையை எழுதி உள்ளார். எனவே அவர் இருதரப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கைதி மற்றும் மாநகரம் படத்தில் இருந்த மேஜிக் திரைக்கதை இந்த படத்தில் மிஸ்ஸிங் என்பது குறிப்பிடத்தக்கது
 
அனிருத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆட்டம் போட வைக்கிறது என்பதும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் மிகப்பெரிய பிளஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது மொத்தத்தில் விஜய்யின் மாஸ்டர் விஜய் ரசிகர்களுக்கும் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கும். ஒரு மாஸ் ஆன திரைப்படம் என்பதும் நடுநிலை ரசிகர்களுக்கு வழக்கம்போல் ஒரு ஏமாற்றமான படம் என்பதும் குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பர்ஸ்ட் ஆஃப் செம்ம… செகண்ட் ஆஃப் ? மாஸ்டர் பார்த்த ரசிகர்களின் கருத்து!