Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாயும் புலி - பாய்ந்ததா?-பதுங்கியதா?

Advertiesment
பாயும் புலி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பட தலைப்பு. பெயருக்கேற்ப விஷால் பாய்ந்திருக்கிறார்.

மதுரையில் உள்ள ரவுடிகளை என்கவுண்டரில் போட்டுத் தள்ளும் அதிகாரி வேடம் விஷாலுக்கு செம லுக். ரவுடிகளை நையப்புடைத்து துவம்சம் செய்யும் போதும் கிளைமாக்சில் அண்ணன் சமுத்திரக்கனி தான் எல்லா ரவுடியிசத்துக்கும் காரணம் என்பது தெரிய வரும்போது பாசத்திற்கும் கடமைக்கும் மத்தியில் நடக்கும் பெரிய போராட்டத்தை கண்களில் காட்டியிருப்பது நடிப்பின் உச்சம். சமுத்திரக்கனியை வில்லனாக ஏற்க மறுக்கிது மனம். ஆனாலும் அவரது கதாபாத்திரத்துக்கேற்ற நடிப்பு அருமை.

ஏட்டாக வரும் சூரி சிரிப்பில் சரவெடி. குறிப்பாக சரக்கடித்து விட்டு வீட்டுக்கு வரும்போதெல்லாம் மனைவியிடம் உதை வாங்குவது கலகல. காஜல் குளோப்ஜாம் மாதிரி அழகு. சாலையைக் கடக்க திணறி விஷாலின் காலையே பார்க்கும்போதும் யூடர்ன் அடிக்க வண்டியை விட்டு இறங்கி மெல்ல உருட்டும்போதும் அழகு. டி இமானின் இசையில் சிலுக்கு பாடல் சூப்பர். மதுரை பூமார்க்கெட், திருப்பரங்குன்றம், ஆனைமலை, பறவை பார்வையில் மதுரை என காமிரா மதுரையின் அழகை கொள்ளையடித்துள்ளது. மொத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் பாயும்புலி யின் விறுவிறுப்பு முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் குறைவுதான்.

மொத்தத்தில் விஷால்-சுசீந்திரன் கூட்டணியின் இப்படம் பாண்டியநாடுடன் ஒப்பிட்டால் ரசிகர்களுக்கு சிறிது ஏமாற்றம்தான் மிஞ்சும்.
 

Share this Story:

Follow Webdunia tamil