Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெய்ஹிந்த் 2 - திரை விமர்சனம்

ஜெய்ஹிந்த் 2 - திரை விமர்சனம்

சி.பி.செந்தில்குமார்

, திங்கள், 10 நவம்பர் 2014 (14:37 IST)
ஹீரோ ஒரு கராத்தே  மாஸ்டர். இந்த மாதிரி  முதல்லயே  காட்டிட்டா பின்னால அடியாளுங்களை அடிக்கும்போது  50 பேரை ஒட்டுக்கா அடிச்சாலும்  ஒரு  பய  கேள்வி கேட்க மாட்டான். இவரு  எக்சசைஸ் பண்ணும்போது பிட்டுப்பட ஹீரோயின்  ஒளிஞ்சிருந்து  ஹீரோவைப் பார்த்து  ரசிப்பது  மாதிரி  ஒளியாம அசால்ட்டா  ஹீரோயின் ரசிக்குது.

ஒரு வாட்டி மாடில  துணி  காய வை க்கும்போது   ஸ்லிப் ஆகி   ஹீரோயின் கீழே  விழ  இருக்காரு. அப்போ  4 கிமீ தாண்டி வாக்கிங் போய்ட்டிருக்கும் ஹீரோ  ஓடி வந்து  காப்பாத்த  2 பேருக்கும்  லவ்.

இப்டியே  போனா படம் பப்படம் ஆகிடும். அதனால  ஷங்கர்  ஏ ஆர் முருக தாஸ்  மாதிரி  ஒரு  சமூக அக்கறை உள்ள  ஆளா  ஹீரோவைக்காட்டனும்.

அதுக்கு  ஒரு  கிளைக்கதஒரு  ஏழை  பெற்றோர். அவங்க  குழந்தையை  எல் கே ஜி ல சேர்த்த  பிரபல தனி  யார்  பள்ளில   ட்ரை  பண்றாங்கடொனேசன் லட்சக்கணக்கில்  கேட்கறாங்க. அதைக்கட்ட  கிட்னியை வித்து  சமாளிக்கறார் அப்பா. ஆனா  முழுசாக்கட்ட  முடியல. போனாப்போகுதுன்னு அரசுப்பள்ளில சேர்க்க வேண்டியதுதானே? அப்டி செஞ்சா படம் அப்பவே  முடிஞ்சிடுமே. எப்படி 2 மணி  நேரம்  இழுக்கறது?

சீட்  கிடைக்காத  துக்கத் தில் அந்த ஏழைப்பெற்றோர்  குடும்பத்தோட தற்கொலை  செய்யுது.ஹீரோ   எல்லா  தனியார்  பள்ளிகளும் அரசுடைமை ஆக்கனும் அரசே  டேக் ஓவர்  பண்ணனும்னு மீடியா  மூலம்  போராடறார் உடனே  வில்லன்  இதை  முறியடிக்க  ஹீரோ  மேல  பொய்யான  ஒரு கொலைக்கேசில் மாட்டி  விட்டு  ஜெயிலுக்கு அனுப்பறான். இதோட  இடை வேளை.

ஹீரோ  எப்படி  தன்  கொள்கைல  ஜெயிக்கறார்? என்பது  மிச்ச  மீதிக்கதை. ஹீரோவா ஆக்சன் கிங் அர்ஜுன். இவ்வளவு வயசு ஆகியும்  இன்னும்  தன்  ஜிம் பாடியை மெய்ண்ட்டெயின் பண்ணும் அவரைப்பாராட்டலாம்.டைட்டிலைப்பார்த்ததும் நான்  கூட  பிரதமர்  மோடியை  ஹீரோ அந்நிய சக்தி சதி ல  இருந்து காப்பாத்தும்  கத-னு நினைச்சேன். ஃபைட்  சீனில் அபளாஸ் வாங்கறார்.இதுகும் மேல  என்ன வேணும்?

ஹீரோயின் சுர்தீன் சாவ்லா. வித்யா பாலன் மாதிரிஅகல   முகம் ஆண்ட்ரியா மாதிரி அகல  முதுகு. அவர்  திரையில் வரும்போது  கண்கள் அவரை  விட்டு அகல மறுக்குது. இருந்தாலும்  முகம்  கொஞ்சம்  முத்தல்  தான்.

காமெடிக்கு  மயில் சாமி. ஆந்திராவில்  வசூல் அள்ள  பிரம்மானந்தம் இவர்கள் காமெடி  டிராக் ஆல்ரெடி  வடிவேலு  செஞ்சதுதான். இருந்தாலும் சிரிக்க  முடியுது. ஸ்டண்ட்  மாஸ்டர்  பட்டையைக்கிளப்பறார்.  ஓப்பனிங்  ஃபைட்  ஜெயில் ஃபைட்  க்ளைமாக்ஸ்  ஃபைட்  எல்லாம்  ஓக்கே ரகம்

இசை  காது  வலிக்குது.  எப்போ பாரு  ஹரி பட சத்தம் மாதிரி  இருப்பது எரிச்சல் . அந்த  குழந்தை நடிப்பு அருமை . கொள்ளை  கொள்ளும்  முகம் சும்மா அனுதாபம் தேட அந்த குழந்தையை சாகடித்திருப்பது தவிர்த்திருக்க   வேண்டியது.

இந்தப் படத்திற்கு நமது மதிப்பெண் - 2 / 5

இந்தப் படத்தைப் பார்க்க கீழே உள்ள லிங்க்கைக் கிளிக் செய்யுங்கள்
webdunia
மனதைக் கவர்ந்த  வசனங்கள்

1. என்னை மறந்துடு னு நீங்க சொல்லும்போது உங்க கண்ணில் தெரியும் வலியை உணர முடியாதவளா இருப்பேனா நான் ?எப்டி உன்னைக்காதலிச்சிருப்பேன்?-#jh2

2. அனைத்துத்தனியார் பள்ளிகளும் அரசுபள்ளி ஆகனும்.அரசே அதை எடுத்து நடத்தனும்.இதுதான் தீர்வு#JH2

3. பில்டிங் FUND 50000 ரூபா. அய்யா.நீங்க கட்ற பில்டிங்க்கு நாங்க எதுக்குங்க டொனேசன் தரனும்?#JH2

4. 12 வருசத்துக்கு முன் 15 வயசுப்பொண்ணு க்கு பொரி உருண்டை கொடுத்துக்கரெக்ட் பண்ணுனது நீ தானே? பிரம்மானந்தம் = ஹிஹி யா #jh2

5. தப்பை எப்போ உணர்ந்துட்டியோ அப்போவே யார்ட்டயும் மன்னிப்புக்கேட்கத்தேவை இல்லை # JH2

6. எதுவுமே சாதிக்காம வெறும் மூச்சு மட்டும் விடறது வாழ்க்கை இல்லை

படம் பார்க்கும்போது போட்ட  ட்வீட்ஸ்

1. எந்த ஊரா இருந்தாலும் எந்த தியேட்டரா இருந்தாலும் ஷோ டைம்க்கு 10 நிமிஷம் லேட்டா போய் இருட்ல சீட் தேடி் தடவித்தடுமாறுவான் தமிழன்

2. பிரபல தனியார் பள்ளியில் குழந்தைக்கு LKGசீட் கிடைக்கலைன்னு ஒரு ஏழைக்குடும்பமே தற்கொலை செய்வதெல்லாம் வலிந்து திணிக்கப்பட்ட செயற்கை
#JH2

3.LKG ஸ்கூல் FEES கட்ட கிட்னியை வித்து 30000 ரூபா ரெடி பன்றதெல்லாம் ஓவர்டோஸ் சென்ட்டிமென்ட் #JH2

4.ஹீரோ எக்சசைஸ் பண்ணும்போது ஹீரோயின் அவரை ஆச்சரியமாப்பாக்குது.அது பாக்கட்டும்னுதான் அண்ணன் ஜிம்க்கே போறாரு

5.வசூல்வேட்டை நடத்தினாலும் தனியார் பள்ளியில் தன் குழந்தை படித்தால் தான் கவுரவம் என நினைக்கும் மக்களை ப்பற்றிய கதை#JH2

6. ஹீரோயின் 15 வது மாடி ல ஸ்லிப் ஆகி ஊசலாடிட்டு இருக்கும்போது ஹீரோ 15*25 = 375 படி ஏறி காப்பாத்திட்டாரு.உடனே லவ்.வாவ் #JH2

இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1.கதைக்கு சம்பந்தம்  இல்லைன்னாலும்  முதல் பாக பட ஹிட்  ராசிக்காக ஜெய் ஹிந்த் 2 என  வைத்தது. டைட்டில்  டிசைன் , மார்க்கெட்டிங்  எல்லாம் ஓக்கே

2. படம்  மொக்கைப்படம்னு  யாரும்  சொல்லிடக்கூடாதுன்னு சாமார்த்தியமா சமூக நலக்கருத்தை  கதைக்கருவா  வைத்தது

இயக்குநரிடம்  சில கேள்விகள்

1. முதல்  பாக  ஹிட்  ராசிக்காக டைட்டிலை  அதே  போல்  வைச்சீங்க .ரைட்டு. ஏன் முதல் பாக நாயகி  ரஞ்சிதாவை இதிலும் நாயகி ஆக்கலை ?

செம  பரபரப்பா  இருந்திருக்கும்  . மிஸ்டு

2. இந்த  மாதிரி   ரமணா  டைப்  கதைல   ஹீரோயின்  காதல்   தியாகக்கதை எப்பிசோடு  எதுக்கு?

3.பின்  பாதியில்  எதுக்கு   கதை  ஸ்கிப் ஆகுது ?  ஹீரோ  சிங்கப்பூர் எல்லாம் ஏன்  போகறாரு?

4. சாதா ஆள்   சொல்லும்  அந்தக்கருத்து  எப்படி  மக்களிடம் போய்ச்சேருது? டிவி  மூலம்னு சால்ஜாப்  சொன்னது  எடுபடலை சி  பி  கமெண்ட் - செயற்கையான  சமூக அக்கறை,வலிந்து  திணிக்கப்பட்ட அனுதாபம் சம்பாதிக்கும் காட்சிகள் ,முதல் பாகம் அளவு வரவில்லை, ரொம்ப மோசம்  இல்லை. பாஸ்

ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) -40

குமுதம்  ரேங்க் ( கணிப்பு) -  சுமார்



இந்தப் படத்திற்கு நமது மதிப்பெண் - 2 / 5

இந்தப் படத்தைப் பார்க்க, கீழே உள்ள லிங்க்கைக் கிளிக் செய்யுங்கள்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லிங்காவின் உலகளாவிய உரிமை, ஈராஸ் இன்டர்நேஷனல் வாங்கியது