Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஈசன் பிரிட்டிஷாரை விரட்டும் கேப்டன் மில்லரானது எப்படி? - "கேப்டன் மில்லர்" திரைவிமர்சனம்

Advertiesment
ஈசன் பிரிட்டிஷாரை விரட்டும் கேப்டன் மில்லரானது எப்படி? -

J.Durai

, ஞாயிறு, 14 ஜனவரி 2024 (12:00 IST)
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்த திரைப்படம்  *"கேப்டன் மில்லர்"


 
இத் திரைப்படத்தில் பிரியங்கா மோகன்,சிவ ராஜ்குமார், வினாயகன், நிவேதா சதிஸ், காளி வெங்கட், பால சரவணன், இளங்கே குமாரவேல், உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்

இந்திய சுதந்திரத்திற்கு முன் பிரிட்டிஷர்  ஆட்சி ஆதிக்க காலத்தில்  இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில்  ஒரு பழங்குடி இனக்குழுவைச் சேர்ந்த அனலீசன் (தனுஷ்),மன்னர்கள் மற்றும் ஆதிக்க சாதியினரின் ஒடுக்கு முறைகளாலும் பிரிட்டிஷாரின் அடக்கு முறைககைளாலும்
தன்னையும் தன்  தன் மக்களையும் தீண்டாமையில் நடத்தும் விதம் என வேதனையில் வாடும் தனுஷ், மறுபக்கம் ஆங்கிலேயர்களை எதிர்த்து தனுஷின் அண்ணன் சிவராஜ்குமார் போராடி கொண்டிருக்கிறார்.

இந் நிலையில் பிரிட்டிஷர்கள்  ராணுவத்தில் சேர்ந்தால் தமக்கு மரியாதை கிடைக்கும் என ஆசைப்பட்டு இராணுவத்தில் சேர்ந்து விடுகிறார் கதாநாயகன் தனுஷ் அங்கு துப்பாக்கி சுடுதல் போன்ற விஷயங்கள் கற்றுக் கொண்டு, ஒரு சிறந்த சிப்பாயாக தேர்ச்சி பெறுகிறார் அவருக்கு ஆங்கிலயேர்கள் மில்லர் என்று சூட்டபடுகிறது

தேர்ச்சி பெற்ற சிப்பாய்களை வைத்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடும் இந்திய மக்களை கொள்ள தனுஷுக்கு உத்தரவு வருகிறது. முதலில் அதிர்ச்சியில் உறைந்து போகும் தனுஷ், பின் தன்  கண்களை மூடிக்கொண்டு சுட்டு தள்ளுகிறார்

 
தனது மக்களை கொன்று விட்டோமே என்று குற்ற உணர்ச்சியில் இருக்கும் தனுஷ், இனி இதை செய்ய கூடாது என முடிவு செய்து இதற்கு காரணமாக இருந்த, தனக்கு உத்தரவு கொடுத்த ஆங்கிலேய தலைமை வீரரை கொன்று விடுகிறார். இதன்பின், அவர் ஆங்கிலேயர்களால் தேடப்படுகிறார் மில்லர் (தனுஷ்) இந்த சாமானிய இளைஞன் அடக்கு முறைகளுக்கு எதிராக எப்படி கிளர்ந்தெழுந்து ஈசனாக இருந் தனுஷ் கேப்டன் மில்லராக உருவெடுக்கிறான்

என்னென்ன இன்னல்களை எல்லாம் எதிர்கொண்டார், தனது மக்களுக்காக என்ன செய்தார் என்பதே படத்தின்  கதை. தனுஷ் நடிப்பில்  மிரட்டி இருக்கிறார். ஒவ்வொரு காட்சிகளிலும் திறம்பட தனது  நடிப்பை வெளி காட்டியுள்ளார்

ஜிவி பிரகாஷின் இசை படத்த்திற்கு மிக பெரிய பலம். பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் சந்திப் கிஷன், நிவேதா சதீஷ் ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்திற்கேற்றார் போல் சிறப்பாக  நடித்திருக்கிறார்கள்.

 மொத்தத்தில் கேப்டன் மில்லர் திரையில்  கொண்டாட வேண்டிய படம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ் வரலாற்றில் சாதனை.. முதன்முதலாக டைட்டில் வின்னரான வைல்டு கார்டு போட்டியாளர்..!