"அப்பு VI STD" திரை விமர்சனம்!
, வெள்ளி, 4 அக்டோபர் 2024 (17:09 IST)
ஆர் கே கிரியேட்டிவ் மேக்கர்ஸ் சர்பில் வீரா தயாரித்து வசீகரன் பாலாஜி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் "அப்பு VI STD"
இத் திரைப்படத்தில்
வினோத்,பிரியா, டார்லிங் மதன், பி.எல்.தேனப்பன், வேலு பிரபாகரன், பிரியங்கா ரோபோ சங்கர்,விஜய் சத்யா, சுப்ரமணி, ஜீவன் பிரபாகர், செல்வா, வினோத் பிரான்சிஸ்,மூர்த்தி, சித்ரா உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தாய் அரவணைப்பு இல்லாத தனது மகன் அப்பு (ஜீவன்) என்ன கஷ்டப்பட்டாலும் நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறார் அப்புவின் தந்தை.
திடீரென அப்புவின் தந்தை ஒரு சாலை விபத்தில் உயிரிழக்கிறார்.
அப்பு (ஜீவன்) படிப்பு வாழ்க்கை பாதியில் நின்று விடுகிறது.
மறு பக்கம் அப்பு வசிக்கும் அதே பகுதியில் நாயகன் வினோத், சூழ்நிலை காரணமாக தனது வாழ்க்கை திசை திரும்பி ஒரு ரவுடியாக மாறி என்கவுண்டர் லிஸ்டில் இடம் பெறுகிறார்.
ஒரு கட்டத்தில் வினோத்தை போலீஸ் என்கவுண்டர் செய்ய முடிவு செய்கிறது.
தனது மகன் நன்கு படிக்க வேண்டும் என்று நினைத்த தந்தையின் ஆசை கனைவை அப்பு நிறைவேற்ற முடிந்ததா?
சந்தர்ப்ப சூழ்நிலையால் வாழ்க்கையை தொலைத்து ரவுடியாகி போலீஸுக்கு பயந்து ஓடிக் கொண்டிருக்கும் வினோத்தின் வாழ்க்கை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
மனித வாழ்க்கைக்கு கல்வி எவ்வளவு முக்கியத்துவம் எத்தனை கஷ்ட்டம் வந்தாலும் கல்வியை மட்டும் கைவிட கூடாது என்பதை சொல்லத் தெரியாமல் சொல்லி இருக்கிறார் படத்தின் இயக்குனர் வசீகரன் பாலாஜி.
நாயகன் வினோத், இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். சூழ்நிலையால் ரவுடியாக மாறும் கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடிக்க கடுமையாக போராடி நடிக்க முயற்சித்துள்ளார்
நாயகியாக நடித்திருக்கும் பிரியா,ஆணவக் கொலைகளின் கொடூரத்தை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து பார்வையாளர்களை ஆணவக் கொலை செய்கிறார்.
அப்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜீவன் பிரபாகரன், படிப்பதற்காக ஏங்கும் காட்சிகளில் சுமாராக நடித்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் தீபக் கதைக்களத்திற்கு ஏற்ப மிக எளிமையாக பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு தனது கேமராவை பயன்படுத்தி இருக்கிறார்.
ஆலன் விஜய் பின்னணி இசை படத்திற்கு சம்பந்தமே இல்லை.
மேக்கிங் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக படத்தில் ஏகப்பட்ட குறைபாடுகள்.
மொத்தத்தில் "அப்பு ஆறாம் வகுப்பு" படம் பார்ப்பவர்களுக்கு வைப்பான் ஒரு ஆப்பு.
அடுத்த கட்டுரையில்