ரொம்ப டேஞ்சரான ஸ்கிரிப்ட்... தாராள பிரபுபடத்தை விமர்சித்த மனோபாலா!

சனி, 11 ஏப்ரல் 2020 (14:03 IST)
பாலிவுட்டின் முக்கிய வளரும் நட்சத்திரமாக வலம் வரும் ஆயுஸ்மான் குர்ரானா முதன் முதலில் அறிமுகமான திரைப்படம் விக்கி டோனர். விந்து தான விழிப்புணர்வு பற்றிய இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு விருதுகளையும் வாரி குவித்தது.

இதையடுத்து இந்த படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்யும் ஆர்வம் இயக்குனர்களிடமும் தயாரிப்பாளர்களிடமும் அதிகரித்தது. அந்தவகையில் தமிழில் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கும் இப்படத்தில் பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார் அவருக்கு ஜோடியாக தடம் படத்தில் நடித்த தன்யா ஹோப் நடித்துள்ளார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் நடித்துள்ளார். இப்படம் வெளியாகவிருந்த நேரத்தில் தான் கொரோனா வைரஸ் பாதித்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திரையரங்குகள் மூடப்பட்டதால் இப்படம் அமேசான் ப்ரைமில் வெளியானது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தை பார்த்த மனோ பாலா கூறியதாவது, "நான் தாராள பிரபு படத்தை அமேசான் ப்ரைமில் பார்த்தேன் .. மிகவும் ஆபத்தான ஒரு ஸ்கிரிப்டை அருமையாக கையாண்டிருக்கின்றனர். விவேக் சார் மற்றும் ஹரிஷ் கல்யாணின் நடிப்பு அற்புதமாக இருந்தது. "  என பாராட்டியுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்ஸ் " ஐயா உங்களையே படத்தை அமேசானில் பார்க்க வச்சுட்டாங்களே என கூறி கிண்டல் அடித்து வருகின்றனர்.

I saw Tharala Prabhu n Amazon..dangerous script..handled it very good..neat taking.wonderful acting by always Vivek sir..dalm good by Harish Kalyan and others..enjoy it..

— manobala (@manobalam) April 10, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் அய்யோ காமெடி... அந்நியன் கெட்டப்பில் மிரட்டலான அர்ச்சனா!