ஆந்திராவில் சுமாரான வெற்றியை பெற்றி ஓ மை ஃபிரண்ட் படத்தின் தமிழ் மொழிமாற்றுதான் இந்த ஸ்ரீதர். நேரடி தமிழ்ப் படத்துக்குரிய பில்டப்புடன் வெளியிடுகிறார்கள்.
சித்தார்த், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, நவ்தீப், லட்சுமி ராமகிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படம் நட்பா காதலா எது சிறந்தது என்ற கருவை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. வி.ஸ்ரீராம் கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்கியிருக்கிறார். வசனம் எம்.ரவிக்குமார். ஹைதராபாத், சுவிட்சர்லாந்த் ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.
ஓ மை ஃபிரண்ட் படத்தில் சித்தார்த்துக்காக ஒரு பாடலை பென்னி தயாள் பாடியிருந்தார். இதனை தமிழில் சிம்பு பாடினால் நன்றாக இருக்கும் என அவரைக் கேட்க உடனே ஒப்புக் கொண்டு பாடிக் கொடுத்திருக்கிறார். நட்புக்கு இல்லை எல்லை என்ற இந்தப் பாடலை கே.கோபி பாலா எழுதியுள்ளார்.
தேவி ஸ்ரீதேவி சதீஷ் தயாரித்திருக்கும் இந்தப் படம் வரும் 18ஆம் தேதி திரைக்கு வருகிறது.