Publish Date: Fri, 06 Jan 2012 (12:55 IST)
Updated Date: Fri, 06 Jan 2012 (12:52 IST)
தனது திருப்பதி பிரதர்ஸ் சார்பில் லிங்குசாமி இயக்கியிருக்கும் படம் வேட்டை. மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலா பால் நடித்துள்ளனர்.
பையாவுக்குப் பிறகு கமர்ஷியல் படத்தை இப்படிதான் செய்ய வேண்டும் என்ற தெளிவுக்கு வந்திருக்கிறார் லிங்குசாமி என்பதை அவரது வேட்டை நம்பிக்கையில் தெரிகிறது. மாதவன் போலீஸ் அதிகாரி. ஆர்யா அவரது தம்பி. அண்ணனுக்கு வரும் தொழில் பிரச்சனையில் தம்பி எப்படி தாங்குகிறான் என்பது கதை.
இந்த அண்ணன் தம்பியின் ஜோடியாக முறையே சமீரா ரெட்டி, அமலா பால் நடித்துள்ளனர். இவர்களும் படத்தில் அக்கா, தங்கையாக வருவது குறிப்பிடத்தக்கது. காதலுக்கு உள்ள முக்கியத்துவம் போலவே ஆக் ஷனுக்கும் அழுத்தம் தரும் படம். யுவனின் இசை படத்தின் மற்றுமொரு பிளஸ்.
இந்தப் படத்தின் விநியோக உரிமையை யுடிவி வாங்கியுள்ளது.
பொங்கலுக்கு வெளியாகும் இந்தப் படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.