Article Movie Preview In Tamil %e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d 110081100034_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வம்சம்

Advertiesment
வம்சம்
, புதன், 11 ஆகஸ்ட் 2010 (14:49 IST)
மேக்னா மூவிஸ் சார்பில் தமிழக முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசு தயா‌ரித்திருக்கும் படம், வம்சம். புதுக்கோட்டையை கதைக்களமாகக் கொண்டு இப்படம் தயாராகியுள்ளது.

WD
பசங்க படத்தில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த பாண்டிரா‌ஜின் இரண்டாவது படம் வம்சம் என்பது படத்தின் மீதான அதிக எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணம். வம்சாவழியைப் பற்றிய கதைகளில் வன்முறை தூக்கலாக இருக்கும். ஆனால் வம்சத்தில் வலி இருக்குமே தவிர வன்முறை இருக்காது என்கிறார் பாண்டிரா‌ஜ்.

படத்தில் அருமையான காதல் ஒன்றும் வருகிறது. காதலனாக அருள்நிதியும், காதலியாக சுனைனாவும் நடித்துள்ளனர். அருள்நிதி தயா‌ரிப்பாளர் மு.க.தமிழரசுவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

கஞ்சா கருப்பு, ஜெயப்பிரகாஷ், அனுபமா, ரா‌ஜ்குமார் ஆகியோரும் நடித்துள்ளனர். மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்ய தா‌ஜ்நூர் என்பவர் இசையமைத்துள்ளார். இவர் இசையமைக்கும் முதல் படம் வம்சம்.

காதல், பகை, விருந்து, திருவிழா என கிராமத்தின் அனைத்து அத்தியாயங்களுடன் தயாராகியிருக்கும் வம்சம் வரும் 13 ஆம் தேதி திரைக்கு வருகிறது. சென்சார் இப்படத்துக்கு கொடுத்திருக்கும் சான்றிதழ், யு.

Share this Story:

Follow Webdunia tamil