Publish Date: Thu, 23 Jul 2009 (14:07 IST)
Updated Date: Thu, 23 Jul 2009 (14:06 IST)
த்ரிசம் புரொடக்சன் சார்பில் பாலசுப்பிரமணியன், ரகுராம் தயாரித்திருக்கும் படம் மலையன். எம்.பி.கோபி படத்தை இயக்கியிருக்கிறார்.பட்டாசு தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர்களின் வாழ்க்கை பலரும் நினைப்பதைவிட கடுமையானது. இந்த வாழ்க்கையை பலர் குறும் படமாகவும், ஆவணப்படமாகவும் பதிவு செய்திருக்கிறார்கள். முதல் முறையாக மலையனில் அவர்களின் கந்தக வாழ்க்கை திரைப்படமாகியிருக்கிறது.
பட்டாசு தொழிற்சாலையில் வேலை செய்யும் மலையன் என்ற கதாபாத்திரத்தில் கரண் நடித்திருக்கிறார். கேரக்டருக்காக வெயிலில் நின்று கருத்தவர், படத்தில் மேக்கப்பையே பயன்படுத்தவில்லை. ஆக்ரோஷமான இளைஞராக நடிப்பின் இன்னொரு முகத்தை இதில் வெளிப்படுத்தியிருக்கிறார் கரண்.
ஷம்மு ஹீரோயின். பாக்கியம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை... வாழ்ந்திருக்கிறார். பாடல் காட்சி தவிர்த்து இவருக்கும் மேக்கப் கிடையாது. இன்னொரு ஹீரோயின் உதயதாரா, சுமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்கள் தவிர சரத்பாபு, ராஜன் பி.தேவ், கஞ்சா கருப்பு, மயில்சாமி ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஜே.ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய தினா இசையமைத்துள்ளார். யுகபாரதி, சினேகன், பவுன்ராஜ் ஆகியோர் பாடல்கள் எழுதி உள்ளனர். அனல் அரசு சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார்.
சென்சார் படத்துக்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.