புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் நீல.பத்மநாபன் கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியை மையப்படுத்தி பல வருடங்களுக்கு முன் எழுதிய தலைமுறைகள் நாவலையே வ.கௌதமன் மகிழ்ச்சி என்ற பெயரில் எடுத்திருக்கிறார். இதில் வ.கௌதமன் ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார்.
நாவலை படமாக்குவது என்பதால் வல வருடங்களாக இதன் திரைக்கதையை எழுதியிருக்கிறார் வ.கௌதமன். இந்த திரைக்கதையை முடிக்க அவர் 12 வருடங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்.
படத்தின் பெரும்பாலான காட்சிகளை கன்னியாகுமரி மாவட்டத்தில் படமாக்கியுள்ளனர். படத்தின் பிரதான அம்சங்களில் ஒன்று வித்யாசாகரின் இசை. வைரமுத்து, அறிவுமதி, பச்சியப்பன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். ஒளிப்பதிவு செழியன். சூப்பர் சுப்பராயன் சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார்.
வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வரும் இப்படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.