Article Movie Preview In Tamil %e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf 111111400051_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போராளி

Advertiesment
போராளி
FILE
நாடோடிகளுக்குப் பிறகு சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடித்திருக்கும் படம். சசிகுமா‌ரின் கம்பெனி புரொடக்சனே இந்தப் படத்தை தயா‌ரித்துள்ளது.

எல்லா மனிதனுமே போராளிதான். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் போராட்டம் இருக்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் கரு. கிராமம், நகரம் என இரு பகுதிகளில் நடப்பதாக இந்தக் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

கிராமத்தில் தோள் வரை புரளும் முடியுடனும், நகரத்தில் கிராப் தலையுடனும் இருவேறு கெட்டப்புகளில் சசிகுமார் நடித்துள்ளார். இவருடன் சுப்பிரமணியபுரம் ஸ்வாதியும் நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் அல்ல‌ரி நரேஷுக்கு சசிகுமார் அளவுக்கு முக்கியமான வேடம்.

நாடோடிகள் படத்துக்கு இசையமைத்த சுந்தர் சி. பாபு இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இயல்பான கதை, வித்தியாசமான காட்சியமைப்புகள், துள்ளலான இசை என்று மீண்டுமொரு நாடோடி எஃபெக்டுடன் தயாராகியுள்ளது போராளி.

Share this Story:

Follow Webdunia tamil