Article Movie Preview In Tamil %e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%ae%be 110033100086_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பையா

Advertiesment
பையா
, புதன், 31 மார்ச் 2010 (18:05 IST)
திருப்பதி பிரதர்ஸ் சார்பாக இயக்குனர் லிங்குசாமியின் சகோதரர் என்.சுபாஷ் சந்திலபோஸ் தயா‌ரித்திருக்கும் படம், பையா. பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன் படங்களுக்குப் பிறகு கார்த்தி நாயகனாக நடித்திருக்கும் படம். தமன்னா ஹீரோயின்.

WD
தனக்கு விருப்பமான ஒரு பெண்ணுடன் பெங்களூருவிலிருந்து மும்பை செல்லும் இளைஞன் வழியில் எதிர்பாராத சில பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அது என்ன என்பதுதான் பையா படத்தின் கதை என்கிறார் இயக்குனர் லிங்குசாமி.

யுவன் ஷங்கர் ராஜஇசையமைக்க அனைத்துப் பாடல்களையும் நா.முத்துக்குமார் எழுதியுள்ளார். முந்தைய இரு படங்கள் போலன்றி யதார்த்தமான கார்த்தியை ரசிகர்கள் இந்தப் படத்தில் பார்க்கலாம். மும்பை தாதா மிலிந்த் சோமனுடன் அவர் மோதும் காட்சிகள் படத்தின் டெம்போவை அதிகப்படுத்தும்.

கார் சேஸிங், மசில் பவரை காட்டும் சண்டைக் காட்சிகள் என படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனின் பங்களிப்பு பெ‌ரியது. கலை இயக்கம் ரா‌‌ீவன்.

படத்தின் இன்னொரு பிளஸ், ஆண்டனியின் எடிட்டிங். படத்துக்கு இன்னொரு கலர் தந்திருக்கிறார் என ஆண்டனியை பாராட்டியதோடு கார் ஒன்றையும் அவருக்கு ப‌ரிசளித்துள்ளார் லிங்குசாமி.

படத்தின் வசனங்களை பிருந்தா சாரதி எழுதியுள்ளார். ஒளிப்பதிவு மதி. படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தே இவருக்கு பாராட்டுகள் குவிகிறது. வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த விநியோக உ‌ரிமையை கிளவுட் நைன் என்ற நிறுவனம் வாங்கியுள்ளது.

சென்சார் பையாவுக்கு அளித்திருப்பது யு சான்றிதழ்.

Share this Story:

Follow Webdunia tamil