Article Movie Preview In Tamil %e0%ae%aa%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be 112101700032_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பீட்சா

Advertiesment
பீட்சா
, புதன், 17 அக்டோபர் 2012 (19:45 IST)
அறிமுக இயக்குனர் கார்த்திக் சுப்புரா‌ஜ் இயக்கத்தில் வரும் 19ஆம் தேதி வெளியாகவிருக்கும் படம் பீட்சா. சிவி குமார் இந்தப் படத்தை தயா‌ரித்துள்ளார். அட்டகத்திக்குப் பிறகு இவர் தயா‌ரித்திருக்கும் படம் இது.
FILE

பீட்சா டெலிவ‌ரி செய்யும் இளைஞன் ஒருவனுக்கு ஏற்படும் எதிர்பாராத சில நிகழ்வுகள் படத்தின் ஒன் லைன். இதுவொரு ரொமாண்டிக் த்‌ரில்லர், மூடுபனி, சிவப்பு ரோஜாக்கள் மாதி‌ி என்று கார்த்திக் சுப்புரா‌ஜ் தெ‌ரிவித்துள்ளார். பீட்சா டெலிவ‌ரி செய்யும் இளைஞனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். ரம்யா நம்பீஸன் ஹீரோயின். இதுவரை ஹோம்லியான வேடங்களில் நடித்து வந்தவர் இந்தப் படத்தில் முதல்முறையாக கிளாமராக நடித்துள்ளார். இவர்கள் தவிர ஆடுகளம் நரேன், ஜெய்குமார், பூஜா, கருணா, வீர சந்தானம் ஆகியோரும் நடித்துள்ளனர்.

அட்டகத்தியில் ஆடிப்போனா ஆவணி பாடிய கானா பாலா இந்தப் படத்திலும் பாடியிருக்கிறார். இசை சந்தோஷ் நாராயணன். ஒளிப்பதிவு மாலைப்பொழிதின் மயக்கத்திலே படத்தில் பாராட்டப்பட்ட கோபி அமர்நாத்.

ஆகசன் காட்சிகளை திலீப் சுப்புராயன் அமைத்துள்ளார். எடிட்டிங் லியோ ஜான்.

பெரும்பாலும் புதுமுகங்கள் அல்லது ஒன்றிரண்டு படங்களில் பணிபு‌ரிந்தவர்கள். படத்தின் ட்ரெய்லர் பீட்சா குறித்த எதிர்பார்ப்பை அதிக‌ரித்திருக்கிறது எனலாம். முக்கியமாக புதிய டீமின் புதிய அணுகுமுறை.

சென்சார் ய/ஏ சான்றிதழ் வழங்கியிருக்கும் இப்படம் வெள்ளி அன்று திரைக்கு வருகிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil