Article Movie Preview In Tamil %e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be 2 112071200017_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பில்லா 2

Advertiesment
பில்லா 2
WD
பில்லா படத்தின் இரண்டாம் பாகம். முதல் பாகத்தில் ர‌ஜினியின் பில்லாவை அப்படியே ‌ரீமேக் செய்திருந்தனர். இதில் சாதாரண டேவிட்டாக இருந்த இளைஞன் எப்படி அனைவரும் பயப்படும் பில்லா என்ற டானாக மாறினான் என்பதை காட்டியிருக்கிறார்கள். அதாவது பில்லாவின் ஆரம்பக்கதை.

அகதியாக வந்து டானாக மாறும் வேடத்தில் அ‌‌ஜீத் நடித்திருக்கிறார். ஜோடி பார்வதி ஓமனக்குட்டன். இவர்களுடன் ப்ரூனா அப்துல்லா, வித்யூத் ஜம்வால் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். உன்னைப்போல் ஒருவனை இயக்கிய சக்‌ி டோலட்டி இயக்கியிருக்கிறார்.

பில்லா 2-வின் சிறப்பம்சங்களில் முக்கியமானது தொழில்நுட்பம். ரெட் எபிக் என்ற கேமராவில் படமாக்கியுள்ளனர். இந்திய அளவில் இந்த கேமராவை முதலில் பயன்படுத்தியுள்ளனர். ஒளிப்பதிவு ஆர்.டி.ராஜசேகர். அதேபோல் வெளிநாட்டு சண்டைக் கலைஞர்களை பயன்படுத்தியிருக்கிறார்கள். ஹெலிகாப்ட‌ரில் அ‌ஜீத் தொங்கியபடி வரும் காட்சியை டூப் இல்லாமல் எடுத்திருக்கிறார்கள். ஆக்சன் காட்சிகள் பில்லா 2-வின் முக்கிய பலம்.

அதேபோல் இசை. யுவன் ஷங்கர் ராஜாவின் தீம் மியூஸிக் ஏற்கனவே பெ‌ரிய ஹிட். எங்கே இதனை ஒலிக்கவிட்டாலும் ரசிகர்கள் பரவசமாகிவிடுகின்றனர். அதேபோல் பாடல்களும் ஹிட்டாகியுள்ளன. கோவா, ஹைதராபாத், ஜார்‌ஜியா என்று பல்வேறு இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். தெலுங்கிலும், இந்தியிலும் டேவிட் பில்லா என்ற பெய‌ரில் இப்படம் வெளியாகிறது. சென்சார் ஏ சான்றிதழ் தந்தது ஒன்றே இப்படம் குறித்த ஒரே நெகடிவ் விஷயம்.

வரும் வெள்ளிக்கிழமை படம் திரையரங்குக்கு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil