Publish Date: Wed, 09 Feb 2011 (18:23 IST)Updated Date: Wed, 09 Feb 2011 (18:20 IST)
பிரகாஷ்ராஜின் சைலண்ட் மூவிஸ் தயாரிப்பில் ராதாமோகன் இயக்கியிருக்கும் படம் பயணம். விமானக் கடத்தலை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
FILE
விமானக் கடத்தலை மையமாக வைத்து உலகில் ஏராளமான படங்கள் வந்துள்ளன. என்றாலும் இதில் வித்தியாசமான ஒரு பிரச்சனையை மையமாக வைத்து கதையை நகர்த்தியிருக்கிறார் ராதாமோகன். இது கந்தகார் விமானக் கடத்தலை வைத்து எடுத்த படமல்ல என்று மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
நாகார்ஜுன் ஹீரோ. அவர் கமாண்டோவாக நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ; முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். படத்தில் இவர்தான் வில்லன் என்கிறார்கள். இவர்கள் தவிர சனா கான், பூனம் பஜ்வா, பிரம்மானந்தம், எம்.எஸ்.பாஸ்களர் என தெரிந்த முகங்கள் ஏராளம் உண்டு.
மொழி படத்துக்கு ஒளிப்பதிவு செய்த கே.வி.குகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை பிரவீண் மணி. ஆக்சன் கதை என்பதால் ஒரேயொரு பாடல் மட்டுமே. அதுவும் தீம் ஸாங். மதன் கார்க்கி எழுதியுள்ளார். ரெட் ஒன் கேமராவில் படமாக்கியிருப்பது இன்னொரு சிறப்பு.
சென்சார் யு சான்றிதழ் வழங்கியிருக்கும் இப்படம் வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது.