நீ எதுவாக ஆக வேண்டுமென்று ஏங்கித் தவிக்கிறாயோ.. அதுவாகவே ஆகிறாய் என்ற கீதையின் வரிதான் பசங்க படத்தின் கதைக்கரு.சுப்பிரமணியபுரம் படத்தை தயாரித்த சசிகுமாரின் கம்பெனி புரொடக்சன் பவங்க படத்தை தயாரித்திருக்கிறது. பாண்டிராஜ் படத்தை இயக்கியிருக்கிறார். பசங்க இவருக்கு முதல் படம்.
பாண்டிராஜ் மட்டுமின்றி படத்தில் நடித்திருக்கும் அனேகமாக அனைவருக்கும் இதுதான் முதல் படம். பத்து வயது சிறுவனின் கனவு எப்படி ஒட்டு மொத்த பள்ளிக்கூடத்தையும் கனவுகாண வைக்கிறது என்பதை காதல், அடிதடி, சென்டிமெண்ட் அனைத்தும் கலந்து சொல்லியிருக்கிறார் பாண்டிராஜ். இயக்கத்துடன் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றையும் இவரே எழுதியிருக்கிறார்.
சுப்பிரமணியபுரத்தில் கண்களிரண்டால் தமிழகத்தை இழுத்த ஜேம்ஸ் வசந்தன் பசங்க படத்துக்கு இசையமைத்திருக்கிறார். தாமரை, யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளனர்.
பசங்க குழந்தைகளுக்கான படமா? பெரியவர்களுக்கான படமா?
குழந்தைகள் நடிச்சு, குழந்தைகள் பார்க்கிற படம். பெரியவர்கள் ரசிக்கிற விஷயங்களும் படத்தில் இருக்கு. பெரியவர்களான பிறகும் ஒவ்வொருவரிடமும் குழந்தைத்தனம் இருந்து கொண்டே இருக்கும். அந்த குழந்தைத்தனம் உள்ள ஒஅனைவரும் ரசிக்கிற படமாக பசங்க இருக்கும்.
சுப்பிரமணியபுரம் தந்தவரின் படம் என்பதால் பசங்க படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகம். மே ஒன்று படம் திரைக்கு வருகிறது. சென்சார் படத்துக்கு அனைவரும் பார்க்கத்தகுந்த யு சான்றிதழ் வழங்கியுள்ளது.