கண்ணன் கலைக்கூடம் சார்பில் ஜே.எஸ்.கண்ணன் தயாரித்திருக்கும் படம் நேசி. படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியிருப்பவர் டான்ஸ் மாஸ்டர் ஜான்பாபுவின் மகன் விகாஸ். ஹீரோயின் சோனியா சூரி.
காதல் கதையான நேசியை சரவண கிருஷ்ணா இயக்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிற்பி இசையமைத்திருக்கிறார். படத்தின் ரீரெக்கார்டிங்கின் போது, காதலன் காதலியை சந்திக்கும் காட்சிக்கு இசை வேண்டாம், சின்ன பாடல் ஒன்று வைக்கலாம் என இயக்குனர் கூற, அடுத்த அரைமணியில் பாடலாசிரியர் பழனிபாரதியை வரவழைத்து பாடல் ஒலிப்பதிவை முடித்திருக்கிறார் சிற்பி.ரமேஷ் ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். டான்ஸ் மாஸ்டரின் மகன் என்பதால் நடனக் காட்சியில் தனது முழுத் திறமையை காட்டியிருக்கிறாராம் விகாஸ். அனைத்துப் பாடல்களையும் எழுதியிருப்பவர் பழனிபாரதி. சூப்பர் சுப்பராயன் சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார்.நாயகியின் குளோசப் தொப்புள் காட்சிக்கு நோ சொன்ன சென்சார் படத்துக்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை படம் திரைக்கு வருகிறது.