Publish Date: Wed, 17 Nov 2010 (19:40 IST)Updated Date: Wed, 17 Nov 2010 (19:39 IST)
FILE
அவ்னி சினிமேக்ஸ் சார்பில் குஷ்பு தயாரித்திருக்கும் படம் நகரம். நடிகரும், குஷ்புவின் கணவருமான சுந்தர் சி. படத்தை இயக்கியிருக்கிறார்.
மாதவன் நடித்த ரெண்டு திரைப்படத்தை இயக்கிய சுந்தர் சி. ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் நகரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் கேட் செல்வம் என்கிற திருந்தி வாழும் முன்னாள் ரவுடியாக சுந்தர் சி. நடித்துள்ளார்.
படத்தின் இரண்டாவது ஹீரோ என்று வடிவேலை சொல்லலாம். ஸ்டைல் சேகர் என்ற கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பியிருக்கிறார். அதிலும் இக்கட்டான நேரத்தில் அவர் சொல்லும் ‘சீரியஸா பேசாத... நானே சிரிச்சிடுவேன்’ டயலாக் ரசிகர்களின் வயிறை பதம்பார்க்கும்.
நாயகியாக அனுயா நடித்துள்ளார். இவர் ஒரே நேரத்தில் சுந்தர் சி., வடிவேல் இருவரையும் காதலிப்பது போல் காட்சி அமைத்துள்ளனர்.
தமன் எஸ். இசையமைக்க வைரமுத்து அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார். தளபதி தினேஷ் சண்டைப் பயிற்சி அமைத்துள்ளார்.
வரும் 19 ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்துக்கு சென்சார் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.