Article Movie Preview In Tamil %e0%ae%a4%e0%af%8b%e0%ae%b0%e0%ae%a3%e0%af%88 109052800032_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தோரணை

Advertiesment
தோரணை
, வியாழன், 28 மே 2009 (13:24 IST)
ி.வி. பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா தயா‌ரித்திருக்கும் படம் தோரணை. இணை தயா‌ரிப்பு விக்ரம் கிருஷ்ணாவின் மனைவியும் முன்னாள் நடிகையுமான ஸ்ரேயா ரெட்டி.

webdunia photoWD
சத்யம் தோல்விக்குப் பிறகு விஷால் நடிக்கும் படம் இது. சபா ஐயப்பன் படத்தை இயக்கியிருக்கிறார். இயக்குனராக இது அவருக்கு முதல் படம். அண்ணனைத் தேடி ஊருக்கு வரும் தம்பி எதிர்கொள்ளும் பிரச்சனைகள்தான் படத்தின் கதை. கூடவே இனிமையான காதல் கதை ஒன்றும் படத்தில் இருக்கிறது. விஷாலுக்கு ஜோடியாக நடித்திருப்பவர் ஸ்ரேயா. இவர்கள் இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மலைக்கோட்டைப் படத்தில் விஷால் காமெடி காட்சிகளில் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில்தான் சந்தானம், மயில்சாமி, மனோபாலா போன்ற காமெடி நடிகர்களுடன் முழுநீள காமெடி காட்சிகளில் நடித்திருக்கிறார். காமெடி செய்ய தெ‌ரிந்தால்தான் ஒரு நடிகனை முழுமையான நடிகனாக அங்கீக‌ரிக்க முடியும் என இதற்கு விளக்கமும் அளித்துள்ளார் விஷால்.

படத்தில் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கும் இருவர், கிஷோர் மற்றும் பிரகாஷ்ரா‌ஜ். படத்தின் முதல் பகுதி காமெடி என்றால் பிற்பகுதி அதிரடியான ஆ‌க்சன். ராக்கி ராஜேஷ் சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கிறார். ஒரு காட்சியில் ராமர் வேடத்தில் உடம்பு முழுவதும் நீல சாயம் பூசி நடித்திருக்கிறார் விஷால். ஸ்ரேயாவின் முத்தக் காட்சி மற்றும் நீச்சல் உடை காட்சிகளும் படத்தில் உண்டு.

மணிசர்மா இசையமைத்திருக்கிறார். எடிட்டிங் வி.டி. விஜயன். காமெடி, ஆ‌க்சன், காதல், சென்டிமெண்ட், கிளாமர் என அனைத்தும் கலந்த கலவையாக தயாராகியிருக்கிறது தோரணை. வரும் 29 ஆம் தேதி படம் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil