Publish Date: Thu, 28 Jan 2010 (18:36 IST)
Updated Date: Thu, 28 Jan 2010 (18:36 IST)
ஆர்.பி.கிரியேஷன்ஸ் சார்பில் குமரன் தயாரித்து, நடித்து, இயக்கியிருக்கும் படம், தைரியம். படம் முடிவது வரை இயக்கம் சரோஜ்குமார் என்றிருந்தது. படம் ரிலீஸாகும் நேரத்தில் அவரது பெயர் மறைந்து இயக்கம் குமரன் என்று விளம்பரங்கள் வெளியாகியுள்ளன. எப்படி?
ஷூட்டிங் நடந்துக் கொண்டிருந்த போது சரோஜ்குமாருக்கு உடல் நலமில்லாமல் போனது. அதனால் அவரிடம் முறைப்படி எழுதி வாங்கி நானே படத்தை இயக்கி முடித்தேன் என்கிறார் குமரன்.
படத்தில் ஹீரோவான இவருக்கு தீபு, கார்த்திகா என்று இரண்டு ஹீரோயின்கள். பத்து கோடி ரூபாயில் தைரியத்தை உருவாக்கியிருப்பதாக கூறும் குமரன் படத்தை சொந்தமாக வெளியிடுகிறார்.
படத்தில் குமரன் ஜிம் வைத்திருப்பவராக வருகிறார். இவர் காதலிப்பது தீபுவை. அதே நேரம் கார்த்திகாவும் இவரை காதலிக்கிறார். இந்தக் காதல் குழப்பம், காதலுக்கு எதிர்ப்பு, நாயகனின் தனிப்பட்டப் பிரச்சனை எல்லாவற்றையும் அடிதடியுடன் சொல்கிறது தைரியம்.
கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை மட்டும் 20 நாட்கள் பின்னி மில்லில் அரங்கு அமைத்து எடுத்திருக்கிறார்கள். பவர் பாஸ்ட் சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார்.
வெள்ளிக்கிழமை வெளியாகும் இந்தப் படத்துக்கு சென்சார் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.