Article Movie Preview In Tamil %e0%ae%9a%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88 113040300038_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சேட்டை

Advertiesment
சேட்டை
, புதன், 3 ஏப்ரல் 2013 (18:40 IST)
FILE
2011 ல் இம்ரான்கான் நடிப்பில் இந்தியில் டெல்லி பெல்லி வெளியானது. இந்தியாவின் நியூ ஜெனரேஷன் சினிமா வகையை சார்ந்தது. தாராளமான கெட்டவார்த்தைகள், நெருக்கமான காதல் காட்சிகள் படத்தில் தாராளம். யுடிவி படத்தை தயாரித்திருந்தது.

டெல்லி பெல்லியை தமிழில் யுடிவி யே சேட்டை என்ற பெயரில் தயாரித்தது. ஆர்யா, சந்தானம் பிரேம்ஜி முக்கிய கதாபாத்திரம் ஏற்றனர். பெண்கள் சைடில் ஹன்சிகா மோத்வானி, அஞ்சலி.

டெல்லி பெல்லியை அப்படியே எடுத்தால் தமிழகத்தில் துடைப்பத்தால் அள்ளி கூட்டுவார்கள் என்பதை இயக்குனர் ஆர்.கண்ணன் கண்டு கொண்டார். அந்த மாதிரி காட்சிகளை நீக்கி படத்தின் நீளம் கால்மணி நேரத்துக்கு மேல் குறைக்கப்பட்டது.

அஞ்சலி. ஆர்யா ஒரேயொரு லிப்லாக், ஹன்சிகாவுக்கு குளியல் காட்சி என நெருக்கமான காட்சிகள் குறைக்கப்பட்டன. சுருக்கமாக மட்டன் பிரியாணியிலிருந்த பீஸையெல்லாம் எடுத்துவிட்டு குஸ்காவை பரிமாறப் போகிறார்கள்.

இந்தி திரைக்கதையை தமிழுக்காக பிரித்து மாற்றியவர்கள் - மட்டன் பீஸை எடுத்தவர்கள் என்றும் சொல்லலாம் - இயக்குனர் ஆர்.கண்ணன் மற்றும் சச்சின் படத்தை இயக்கிய ஜான் மகேந்திரன். இசை தமன். நா.முத்துக்குமார், தாமரை, கார்க்கி, கானா பாலா ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர், ஒளிப்பதிவு பி.ஜி.முத்தையா.

டெல்லி பெல்லியின் காரசாரம் சேட்டையில் இருக்கப் போவதில்லை. படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் தந்திருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil