இல்லூஷன் இன்ஜினியரிங் என்ற பட நிறுவனம் சார்பில் கோவையைச் சேர்ந்த மாயா தயாரித்திருக்கும் படம் சிவகிரி. தங்கப்பதக்கம், வால்டர் வெற்றிவேல் மாதிரி நேர்மையான போலீஸ் அதிகாரியை பற்றிய படமிது.
இந்தப் படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரி வேடத்தில் அறிமுகமாகிறவர், சிவகிரி. ஆம், படத்தில் இவரது கேரக்டர் பெயரும், நிஜப் பெயரும் ஒன்று. இவருக்கு ருக்சனா, சாந்தினி, ரிஷா என மூன்று ஜோடிகள்.வில்லனாக குகன் என்பவர் அறிமுகமாகிறார். காமெடிக்கு வெண்ணிற ஆடை மூர்த்தி, வாசு விக்ரம், நெல்லை சிவா, பாலு ஆனந்த் ஆகியோர் உள்ளனர். ராஜாமணி என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் மலையாளத்தின் பிரபல ஒளிப்பதிவாளர் பிபின் தாஸின் உதவியாளர்.மணிவர்மா கலை இயக்குனராகவும், டிஷ்யூம் சக்தி ஸ்டண்ட் மாஸ்டராகவும் பணிபுரிந்துள்ளனர். இசையமைத்திருப்பவர் அராபின்யூசுப். படத்தில் இடம்பெறும் ஐந்து பாடல்களையும் அழகிரி பாண்டியன் எழுதியிருக்கிறார். ஏய் ஆத்தா ஆத்தோரமா வாறியா பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளனர். இந்தப் பாடல் மலைக்கோட்டைப் படத்தில் ஏற்கனவே ஒருமுறை ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.படத்தை ஷிவாஜி இயக்கியிருக்கிறார். இவர் கே.டி.குஞ்சுமோன் தயாரித்த சிந்துநதிப்பூ படத்தை இயக்கிய செந்தமிழனிடம் உதவியாளராக இருந்தவர்.