சௌந்தர்யா ரஜினியின் ஆக்கர் ஸ்டுடியோ தயாரிப்பில் வெளிவரும் முதல் படம். வெங்கட்பிரபுவின் மூன்றாவது படைப்பு.
வெங்கட்பிரபுவின் முதலிரண்டு படங்களில் நடித்தவர்களே இதிலும். பிரேம்ஜி, ஜெய், ஆகாஷ், அரவிந்த், வைபவ் இவர்களுடன் பியா, பெலினி ஆகியோரும் நடித்துள்ளனர். இதில் வெளிநாட்டு நடிகையான பெலினி பிரேம்ஜிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.தேனியிலிருந்து கோவாவுக்கு செல்லும் நண்பர்களுக்கு ஏற்படும் காதல் அனுபவமும் அதனால் உருவாகும் மோதலுமே கதை. கோவாவில் வசிக்கும் பணக்கார வீட்டுப் பெண்ணாக சினேகா நடித்திருக்கிறார். மாடர்ன் ட்ரெஸ்ஸில் இதுவரை பார்க்காத சினேகாவை இதில் பார்க்கலாம் என்கிறார் வெங்கட்பிரபு.பிகினி காட்சிகள் நிறைய என்பதால் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். யுவன், வெங்கட்பிரபு, பிரேம்ஜி, கார்த்திக் ராஜா, பவதாரணி இணைந்து பாடியிருக்கும் குடும்பப் பாடலும் படத்தில் உள்ளது. வாலி, கங்கை அமரன் பாடல்கள் எழுதியுள்ளனர்.சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படம் வரும் வெள்ளியன்று திரைக்கு வருகிறது.