Publish Date: Wed, 13 Jan 2010 (16:55 IST)
Updated Date: Wed, 13 Jan 2010 (16:52 IST)
தெலுங்கில் வெளியான ஆரியா படத்தின் தமிழ் ரீமேக். தனுஷின் ரீமேக் படம் யாரடி நீ மோகினியை இயக்கிய மித்ரன் ஆர் ஜவஹர் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார்.
ஜெமினி பிலிம் சர்க்கியூட் படத்தை தயாரித்திருக்கிறது. தனுஷின் ஜோடியாக நடித்திருப்பவர் ஸ்ரேயா. கீதா என்ற கல்லூரி மாணவியாக அவர் நடித்துள்ளார். யாரடி நீ மோகினியில் நயன்தாராவை ஹோம்லியாக காண்பித்தது போல் இந்தப் படத்தில் பாவாடை தாவணியில் ஸ்ரேயாவை சில காட்சிகளில் உலவவிட்டிருக்கிறார் இயக்குனர்.முக்கோண காதல்தான் கதை. கல்லூரியில் படிக்கும் தனுஷுக்கு ஸ்ரேயா மீது காதல். அவருக்கு வேறொரு இளைஞன் மீது பிரியம். இறுதியில் ஜெயித்தது யார் என்பது கதை. ஸ்ரேயா ஆசைப்படும் இளைஞனாக இந்தி நடிகர் சமீர் தத்தானி நடித்திருக்கிறார். மென்மையான காதல் கதையான இதில் வில்லன்கள் என்று யாரும் கிடையாது. தனுஷ், ஸ்ரேயா தொட்டு நடிக்கும் காட்சிகளோ, டூயட்டோ கிடையாது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க விவேகா, தாமரை பாடல் எழுதியுள்ளனர். பாலசுப்ரமணியெம் கேமரா. எடிட்டிங் கோலா பாஸ்கர். சண்டைப் பயிற்சி தளபதி தினேஷ். ஒரு பாடலுக்கு மேக்னா நாயுடு ஆடியிருக்கிறார்.பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் இந்தப் படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.