மூக்கையா பாண்டியன் தயாரிப்பில் விஜய் ராஜேஷ்கண்ணா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம், கரகம். ராமராஜனின் கரகாட்டக்காரனைப் போல இதுவும், காதல், காமெடியுடன் கரகத்தின் பெருமை சொல்லும் படமாக உருவாகியுள்ளது.
சந்தோஷ் பாண்டியன் கரகத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடி ஸ்ரீநிஸா. படத்தில் இருவரும் கரகாட்ட கலைஞர்களாக வருகிறார்கள்.
கரகம் என்று பெயர் வைத்து படத்தில் கரகாட்டம் இல்லாமல் இருந்தால் எப்படி? தமிழ் சினிமா சரித்திரத்திலேயே பிரமாண்டமான கரகாட்டம் ஒன்றை படமாக்கியிருக்கிறார்கள். இதில் ஹீரோ, ஹீரோயினுடன் நிஜ கரகாட்ட கலைஞர்களும் ஆடியுள்ளனர்.
உச்சந்தலை உச்சியிலே ஏத்தி வச்ச கரகம் - இது தேனிப்பட்டி கரகம் - அதில் கெறங்தய்யா உலகம்...
இந்தப் பாடலை அனுராதா ஸ்ரீராம் பாடியுள்ளார். இதுதவிர தஞ்சை சின்ன பொண்ணு, சமயபுரம் மாரியம்மா என்ற பாடலை பாடி ஆடியிருக்கிறார்.
மண் மணம் கமழ, கிராமிய விழுமியங்களுடன் தயாராகியிருக்கும் கரகம் வரும் வெள்ளிக்கிழமை வெள்ளித்திரைக்கு வருகிறது.