ஒரு மாமாங்கத்துக்கு முன் தயாரான கரண் படம். பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி நாளைதான் வெளியாகிறது. இந்தப் படத்தின் கதையும் ஏறக்குறைய கருப்பம்பட்டி போலதான்.
வெளிநாட்டிலிருக்கும் கரண் தனது இன்றைய நல்ல நிலைமைக்கு காரணமான தனது ஆசிரியரைத் தேடி சொந்த ஊருக்கு வருகிறார். வந்த இடத்தில் அவர் எதிர்கொள்கிற பிரச்சனைதான் கதை.
தஞ்சாவூரை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம். அதனால் தஞ்சாவூர்க்காரரான யுகபாரதியை வைத்து தஞ்சாவூர் வட்டார வழக்கில் ஒரு பாடலை எழுத வைத்திருக்கிறார் பாபு கே.விஸ்வநாத், படத்தின் இயக்குனர். திருவாரூர் பாபு என்ற பெயரில் கதைகள் எழுதி வந்தவர்தான் இவர்.
மித்ரா குரியன் ஹீரோயின். கந்தா தாமதமானதால் காவலன் படம் முந்திக் கொண்டது. விஜய் படம் என்பதால் காவலன்தான் என்னோட முதல் படம் என கூறி வருகிறார் மித்ரா. மேலும் படப்பிடிப்பில் இவர் தந்த குடைச்சல் காரணமாக கொஞ்ச நாள் இவரின் படத்தை விளம்பரத்தில் அனுமதிக்கவில்லையாம் தயாரிப்பாளர். படத்தின் காமெடி போர்ஷனை கவனித்திருப்பவர் விவேக்.
நாளை வெளியாகும் கந்தாவுக்கு யு/ஏ சான்றிதழ் தந்திருக்கிறது சென்சார்.