கந்தா கரணின் காத்திருப்பு படங்களில் ஒன்று. வெளிநாட்டில் நல்ல வேலையில் இருக்கும் ஹீரோ, தனது வளர்ச்சிக்கு காரணமான ஆசிரியரை தேடி தமிழகத்துக்கு வருகிறான். வந்த இடத்தில் தவிர்க்க முடியாமல் சில பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி வருகிறது. அது என்ன, அதிலிருந்து எப்படி மீண்டு வந்தான் என்பது கந்தாவின் ஒன் லைன்.
காவலன் படத்தில் அசினை ஏமாற்றி விஜய்யை திருமணம் செய்யும் மித்ரா குரியன்தான் கந்தாவின் ஹீரோயின். இதுதான் அவரது முதல் தமிழ்ப் படம் என்றால் கந்தாவின் பழங்கதையைத் தெரிந்து கொள்ளுங்கள். போஸ் வில்லனாக நடித்துள்ளார்.சக்தி ஆர்.செல்வா இசையமைத்துள்ளார். யுகபாரதி இசையில் தஞ்சாவூர் பாஷையில் ஒரு பாடலை பதிவு செய்திருக்கிறார்கள். படத்தை இயக்கியிருக்கும் பாபு கே.விஸ்வநாத்தும் யுகபாரதியும் தஞ்சாவூர் மண்ணின் மைந்தர்கள். மொத்தப் படப்பிடிப்பையும் அங்குதான் நடத்தியிருக்கிறார்கள். படப்பிடிப்புக்கு கூடிய கூட்டத்தைப் பார்த்த கரண் தனது படங்களின் ஒரு காட்சியையாவது தஞ்சாவூரில் படமாக்க வேண்டும் என்று முடிவு செய்தாராம். கல்பனா பழனிவேல் இயக்கியிருக்கும் இப்படம் நாளை திரைக்கு வருகிறது. முக்கிய செய்தி, படத்தை இயக்கியிருக்கும் பாபு கே.விஸ்வநாத் ஒரு எழுத்தாளர். பாபு கே.விஸ்வநாத் என்ற பெயரில் கதைகள், நாவல்கள் எழுதியுள்ளார்.