நந்தா, மௌனம் பேசியதே படங்களை தயாரித்த ஏஆர்எஸ் சினி இண்டர்நேஷனல்ஸ் ராஜன் ராதாகிருஷ்ணன் தயாரித்திருக்கும் படம், கதை. மோகமுள் படத்தில் நடித்தவரும், தற்போது பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவருமான அபிஷேக் படத்தை இயக்கியிருக்கிறார்.
ஆங்கிலம், தமிழ் இரு மொழிகளிலும் பரபரப்பாக பேசப்படுகிற ஒரு எழுத்தாளன் வயலின் கலைஞரான நாயகி மீது காதல் கொள்கிறான். இருவருக்குள்ளும் ஏற்படும் மோதலும், காதலும்தான் படத்தின் கதை.
கதாநாயகி வயலின் வாசிப்பவர் என்பதால் அது சம்பந்தமாக சில காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் பிரபல பாடகர் பாலமுரளிகிருஷ்ணா பாட, நாயகி வயலின் வாசிப்பது போல் எடுத்திருக்கிறார்கள். கஞ்சா கருப்பு காமெடி செய்திருக்கிறார்.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஷான் அமெரிக்காவில் சாஃப்ட்வேர் என்ஜீனியராக இருப்பவர். பால் ஜே இசையமைத்துள்ளார். சண்டைப் பயிற்சி பவர் பாஸ்ட், நடனம் காதல் கந்தாஸ்.
கதைக்கு தமிழில் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து ஆங்கிலத்தில் ரீமேக் செய்யும் எண்ணமும் நாயகன் ஷானுக்கு இருக்கிறது.
வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வரும் இப்படத்துக்கு சென்சார் ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.