இந்தியில் வெளியான தபாங் படத்தின் தமிழ் ரீமேக் ஒஸ்தி. தரணி இயக்க சிம்பு நடித்துள்ளார்.
ஏற்கனவே தொடங்கிய வேட்டை மன்னன், போடா போடி படங்களை ஓரமாக ஒதுக்கி வைத்து ஒஸ்தியை ஒரே ஷெட்யூலில் முடித்துள்ளார் சிம்பு. தமன் இசையமைத்துள்ளார்.
FILE
மயக்கம் என்ன படத்தில் நடித்திருக்கும் ரிச்சா இதில் நாயகி. இவர்களுடன் விடிவி கணேஷ், ஜித்தன் ரமேஷ், சோனு சூட் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிக்காக சிம்பு சிக்ஸ் பேக் வைத்துள்ளார்.
இந்தியில் ஹிட்டான முன்னி பாடலுக்கு மலைக்கா அரோரா ஆடினார். இந்தப் படத்தில் சிம்புவுடன் ஆடியிருப்பவர் மல்லிகா ஷெராவத்.