ஆந்திராவில் வெற்றிபெற்ற ஏமாயிந்தி இ வேல என்ற படத்தின் தமிழ் ரிமேக்கே இஷ்டம்.
களவாணி விமல் ஹீரோ. இதுவரை வேட்டி சட்டையில் கிராமத்து இளைஞனாக நடித்த விமல் முதல்முறையாக நகரத்து நாகரீக இளைஞனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடி நிஷா அகர்வால். காமெடிக்கு சந்தானம்.
படத்தில் இன்னொரு ஹீரோவும் உண்டு. அவர் அனூப். இவர் சிக்குபுக்கு படத்தில் ஆர்யாவுடன் நடித்தவர். இவருக்கு ஜோடி பார்வதி நிப்ரான்.
சேகர் வி.ஜோசப் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமன் இசை. நா.முத்துக்குமார், தாமரை, விவேகா பாடல்கள் எழுதியுள்ளனர். திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பவர் பிரேம் நிஸார். இவர் உன்னைப்போல் ஒருவன் சக்ரி டோலட்டியிடம் உதவி இயக்குனராக இருந்தவர்.
பாலாஜி ரியல் மீடியா படத்தை தயாரித்துள்ளது. மே மாதம் படம் திரைக்கு வருகிறது.