Article Movie Preview In Tamil %e0%ae%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%9e%e0%ae%a9%e0%af%8d 111010700039_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இளைஞன்

Advertiesment
இளைஞன்
மார்ட்டீன் புரொட‌க்சன் சார்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கும் படம் இளைஞன்.
FILE

ரஷ்ய நாவலாசி‌ரியர் மாக்சிம் கார்க்கியின் நாவலை தழுவி முதல்வர் கருணாநிதி எழுதிய கதையே இளைஞன் என்ற பெய‌ரில் திரைப்படமாகியுள்ளது. இந்தப் படத்தின் கதையை எழுதியிருப்பதுடன் திரைக்கதை வசனத்தையும் கருணாநிதியே எழுதியுள்ளார்.

1959 ஆம் ஆண்டு நடப்பது போல் கதை எழுதப்பட்டுள்ளது. கப்பல் கட்டும் தொழிற்சாலையில் தொழிலாளர்களை ஒன்றிணைத்துப் போராடும் இளைஞனின் கதையே இளைஞன். இதில் ஹீரோவாக பாடலாசி‌ரியர் பா.விஜய் நடித்துள்ளார். அவருக்கு ஜோடி ரம்யா நம்பீஸன். இவர்களைத் தவிர நாசர், சுமன், நமீதா, ஆகியோரும் நடித்துள்ளனர். பா.விஜய்யின் அம்மாவாக நடித்திருப்பவர் குஷ்பு. வில்லன் சுமன். அவரது ஜோடியாக அதாவது வில்லியாக நமிதா நடித்துள்ளார்.

தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க வித்யாசாகர் இசையமைத்துள்ளார். பாடல்கள் பா.விஜய். மூன்று பாடல்களை வெளிநாட்டில் படமாக்கியுள்ளனர். மொத்தம் 125 நாட்களில் இளைஞனை முடித்துள்ளார் சுரேஷ் கிருஷ்ணா. இது அவரது 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil