அரவான் நாளை வெளியாகிறது. வசந்தபாலன் அங்காடித் தெருவுக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் என்பதால் அனைவரும் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.
WD
அரவான் எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய காவல்கோட்டம் நாவலின் ஒரு பகுதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. 13ஆம் நூற்றாண்டு மதுரைதான் கதைக்களம். அப்போதைய உடைகள், மொழி, பழக்க வழக்கம் என்று அப்படியே 13 ஆம் நூற்றாண்டை கண்முன் கொண்டுவர முயன்றிருக்கிறார்கள்.
ஆதி, பசுபதி, தன்ஷிகா, அர்ச்சனா கவி, கபீ பேடி ஆகியோர் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர். பரத்தும், அஞ்சலியும் கௌரவ வேடத்தில் நடித்துள்ளனர். ஸ்வேதா மேனனும் படத்தில் இருக்கிறார். இவர்கள் அனைவரும் மேல் சட்டை இல்லாமல் நடித்துள்ளனர்.
மதுரை, மேலூர், தென்காசி, கேரளா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். பிரமாண்ட அரங்குகள் அமைத்தும் பல காட்சிகள் படமாக்கப்பட்டன. அம்மா கிரியேஷன்ஸ் சிவா படத்தை தயாரிக்க, பாடகர் கார்த்திக் படத்துக்கு இசையமைத்துள்ளார். இது இசையமைப்பாளராக அவருக்கு முதல் படம்.
படத்தின் அரங்குகளை கலை இயக்குனர் விஜய் முருகன் வடிவமைத்துள்ளார். நாளை இப்படம் திரைக்கு வருகிறது.